RCB அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலக காரணம் என்ன..? முதல்முறையாக காரணத்தை சொன்ன கோலி..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகியதற்கான காரணத்தை முதல்முறையாக விராட் கோலி விளக்கியுள்ளார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் (KKR) அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் எலிமினேட்டர் போட்டி நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இதில் பெங்களூரு அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. இப்போட்டியில் தோல்வி அடைந்ததால், பெங்களூரு அணி ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.

முன்னதாக நடப்பு ஐபிஎல் தொடருடன் பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி விலகுவதாக அறிவித்தார். அதன்படி நேற்றைய கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டிதான் விராட் கோலி கேப்டனாக விளையாடிய கடைசி போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், பெங்களூரு அணியின் கேப்டன் பதவியில் விலக முடிவெடுத்ததற்கான காரணத்தை முதல் முறையாக விராட் கோலி (Virat Kohli) கூறியுள்ளார். அதில், ‘என்னுடைய வேலைப்பழுவை சமாளிக்க வேண்டியுள்ளது. ஆண்டு முழுவதும் மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்கும், ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கும் கேப்டனாக இருப்பது சாத்தியமில்லாத ஒன்று. ஒரு பேட்ஸ்மேனாக அணிக்கு முழு பங்களிப்பையும் வெளிப்படுத்த நினைக்கிறேன். அதேவேளையில் ரசித்து விளையாடுவதை இழக்க விரும்பவில்லை.

போட்டியில் 80 சதவீத உழப்பை மட்டும் கொடுக்க விரும்பவில்லை. அதே நேரத்தில் என் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல், அணியின் சூழலைக் கெடுக்க விரும்பவில்லை. நான் நானாக இருக்க முடியாத கட்டமைப்பை ஏற்கவில்லை. அணிக்கு மிகச்சிறந்த மனநிலையுடன் பங்களிக்கவே விரும்புகிறேன். இப்படி இல்லாவிட்டால், சுயநலமாக இருப்பதுபோல் ஆகிவிடும். புத்துணர்ச்சியுடனும், புதிய யோசனைகளுடன் செயல்படும் இன்னொருவர்தான் அணிக்கு தேவை’ என விராட் கோலி கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்