VIDEO: ‘செம’ சர்ப்ரைஸ்.. பவுலிங் போடுறது யாருன்னு தெரியுதா..? வார்ம் அப் மேட்ச்லையே ‘ட்விஸ்ட்’ வைத்த இந்தியா..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் விராட் கோலி பவுலிங் வீசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை தொடரின் பயிற்சி ஆட்டம் இன்று (20.10.2021) துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் ரோஹித் ஷர்மா கேப்டனாக (Rohit Sharma) இருந்து இந்திய அணியை வழி நடத்தினார். இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 152 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ஸ்டீவன் ஸ்மித் 57 ரன்களும், மார்கஸ் ஸ்டோனிஸ் 41 ரன்களும் எடுத்தனர்.

இதனை அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி, 17.5 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக ரோஹித் ஷர்மா 60 ரன்களும், கே.எல்.ராகுல் 39 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 38 ரன்களும் எடுத்தனர்.

இந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் விராட் கோலி (Virat Kohli) இப்போட்டியில் பவுலிங் வீசினார். ஸ்டீவன் ஸ்மித் மற்றும் மேக்ஸ்வெல் களத்தில் இருந்தபோது கோலியை பந்துவீச கேப்டன் ரோஹித் ஷர்மா அழைத்தார்.

அதில் 2 ஓவர்களை வீசிய விராட் கோலி, 12 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்