‘துணிந்து அத நாங்க பண்ணல’... ‘முதல்ல பேட்டிங் பண்றவங்க கண்டிப்பா இதப் பண்ணனும்’... ‘ஒப்புக்கொண்ட கேப்டன்’!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதங்களின் பேட்ஸ்மேன்கள் துணிச்சலாக அடித்து ஆடாததே தோல்விக்கு காரணம் என்று ஆர்.சி.பி. அணியின் கேப்டன் விராட் கோலி குற்றம் சாட்டியுள்ளார்.
ஐ.பி.எல்லின் 52-வது லீக் போட்டி நேற்றைய தினம் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கிடையில் நடைபெற்றது. முதலில் களமிறங்கிய ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 120 ரன்களை மட்டுமே அடித்தது. இதனால் அந்த அணி மிகவும் மோசமான தோல்வியை சந்தித்தது.
அடுத்ததாக களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி இந்த இலக்கை 14.1 ஓவர்களிலேயே பூர்த்தி செய்து, அந்த அணி ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மாறாக ஆர்சிபி 2-வது இடத்தில் இருந்தாலும் பிளே-ஆப் சுற்றிற்கு முன்னேற அடுத்ததாக டெல்லி கேபிடல்ஸ் அணியுடனான இறுதி லீக் போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இந்நிலையில், இந்த தோல்விக்குப்பின் ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி அளித்த பேட்டியில் கூறியதாவது:
‘உண்மையில் நாங்கள் சேர்த்த ஸ்கோர் போதுமானது இல்லை. பேட்டிங்கில் நாங்கள் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக துணிச்சலாகச் செயல்படவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஷார்ஜா போன்ற மைதானத்தில் இன்னும் கூடுதலாக 40 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும்.
இந்தப் போட்டியின் தோல்வியில் பனிப்பொழிவு முக்கியப் பங்கு வகித்தது. 2-வது இன்னிங்ஸில் பந்துவீச்சில் பனி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதிகமான பனிப்பொழிவால், ஆடுகளத்தைக் கணித்து பந்தை பிட்ச் செய்யவும் முடியவில்லை. ஆனால், டாஸில் வென்றவுடன் வார்னர் அதை கணித்துவிட்டார். 2வது இன்னிங்ஸில் எங்களால் பந்தைப் பிடித்து பந்துவீச முடியாத அளவுக்கு பனிப்பொழிவு இருந்தது.
துபாயில் முதலில் காலநிலை நன்றாக இருந்தது, எந்தவிதமான பனிப்பொழிவும் இல்லை. ஆனால், கடந்த சில போட்டிகளாக துபாயில் பனிப்பொழிவு ஆட்டத்தின் போக்கை மாற்றுகிறது. ஆதலால், முதலில் பேட்டிங் செய்யும் அணி நல்ல ஸ்கோர் செய்வது அவசியம்’ என்று தெரிவித்தார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- “மொதல்ல இவங்க ஒழுங்கா இல்லனா தூக்குங்க!”... ஐபிஎல் போட்டிகளில் அடுத்தடுத்து நடக்கும் கடுப்பு சம்பவங்கள்.. கொதிக்கும் கிரிக்கெட் பிரபலங்கள்!
- அதெப்படி ‘அவுட்’ இல்லாம போகும்.. அம்பயருடன் ‘கடும்’ வாக்குவாதம்.. என்ன ஆச்சு கோலிக்கு..?
- 'சீக்கிரத்திலே அணிக்கு வந்துருவாரு’... ‘உற்சாகமாக காத்திட்டு இருக்கோம்’... ‘நம்பிக்கை தந்த கேப்டன்’... ‘மகிழ்ச்சியில் ரசிகர்கள்’!
- இன்னைக்கு ‘கடைசி’ மேட்ச்.. வேற வழியே இல்ல.. ‘தல’ அத பண்ணியே ஆகணும் .. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
- 'நான் செஞ்ச தப்ப நீங்களும் பண்ணிடாதீங்க...' 'அதனால தான் என்னோட கேரியரே முடிஞ்சு போச்சு...' - ரோஹித்துக்கு முன்னாள் வீரர் அறிவுரை...!
- ‘கோலியே கொஞ்சம் மிரண்டுதான் போயிட்டார்!’ .. “இவரோட யார்க்கர் இருக்கே!” .. அஸ்திவாரத்தையே ‘சைலண்ட்டாக’ அசைத்த ‘புதிய’ டெத் பவுலர்!
- தோனிக்கு அப்றம் ‘கோலிக்கு’ தான் இப்டி நடந்திருக்கு.. ‘அவர்’ வந்தாலே மனுஷன் அவுட் ஆகிறாப்ல பாவம்..!
- டாஸ் போடுறப்போவே வார்னர் 'அந்த விஷயத்தை' கணிச்சு சொன்னாரு...! 'நாங்க தான் புரிஞ்சுக்கல...' - கோலி வேதனை...!
- 'என்னா அடி... இறக்கமில்லையா உனக்கு?'.. ஆர்சிபி-யை தாறுமாறாக துவம்சம் செய்த ஹைதராபாத் அணி!.. பாயின்ட்ஸ் டேபிள் தலைகீழா மாறிடுச்சு!
- டெல்லிக்கு என்ன தான் ஆச்சு?.. தொடர் தோல்விகள்... 'இது' தான் காரணம்!.. 'எப்படி வந்து சிக்கியிருக்கேன் பாத்தீங்களா பா?'.. மாட்டிக் கொண்டு முழிக்கும் ரிக்கி பாண்டிங்!