"சச்சினோட '17' வருஷ ரெக்கார்ட் 'காலி'... 'மீண்டும்' ஒருமுறை சொல்லி அடித்த 'கிங்' கோலி!!..." குவியும் 'பாராட்டு'க்கள்!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கடைசி ஒரு நாள் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே, முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இதனையடுத்து இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து, ஆடிய இந்திய அணியில் தொடக்கத்தில் ரன் ரேட் சுமாராக இருந்தது. ஆனால், இறுதியில் கைகோர்த்த ஜடேஜா - ஹர்திக் ஆகியோரின் ஆட்டத்தால் இந்திய அணி 300 ரன்களுக்கு மேல் குவிக்க உதவியது. ஐம்பது ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 302 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி தற்போது ஆடி வரும் நிலையில், கேப்டன் விராட் கோலி மகத்தான சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

இன்றைய போட்டியில், கோலி 63 ரன்கள் எடுத்து அவுட்டானார். முன்னதாக, அவர் 23 ரன்கள் எடுத்த போது, சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் அதிவேகமாக 12,000 ரன்களை எட்டிய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்த சாதனையை 242 இன்னிங்ஸ்களில் கோலி படைத்த நிலையில், இதற்கு முன்னர் 300 இன்னிங்ஸ்களில் சச்சின் 12,000 ரன்கள் அடித்திருந்த சாதனையை விராட் கோலி 58 இன்னிங்ஸ்களுக்கு குறைவாக வைத்து முறியடித்துள்ளார்.

கிரிக்கெட் உலகின் கடவுள் என வர்ணிக்கப்படும் சச்சின் தெண்டுல்கரின் பல சாதனைகளை விராட் கோலி தொடர்ந்து முறியடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்