"அட, 'கேப்டன்' நம்ம 'பாஷை' பேசுறாரு பாருங்க..." ஆர்ப்பரித்த 'சென்னை' ரசிகர்கள்... வேற லெவலில் வைரலாகும் 'வீடியோ'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் தற்போது நடைப்பெற்று வருகிறது.

முன்னதாக, முதல் டெஸ்ட் போட்டியில், பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படாத நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இதன்படி, டாஸ் வென்று இந்திய அணி பேட்டிங் செய்த நிலையில், முதல் இன்னிங்ஸில் 329 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி, இந்திய அணியின் பந்து வீச்சால் கடுமையாக திணறியது. இதனால் 134 ரன்களில் ஆல் அவுட்டானது. அஸ்வின் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

தொடர்ந்து இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் ஆடி வரும் நிலையில், போட்டியின் ஆரம்பத்தில் இருந்தே இந்திய அணி ரன் அடிக்கும் போதும், விக்கெட்டுகளை கைப்பற்றும் போதும் இந்திய அணிக்கு ஆதரவாக சென்னை ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். இதனிடையே, இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, கோலி பார்வையாளர்களை நோக்கி விசில் அடிக்கும் படி சைகை காட்டினார்.

 

இதனைக் கண்ட ரசிகர்கள், விசில் அடித்து ஆரவாரம் செய்தனர். ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 'விசில் போடு' என்ற வார்த்தை மிகவும் பிரபலம். அதனைக் குறிப்பிட்டு பிசிசிஐ தங்களது ட்விட்டர் பக்கத்தில், 'சென்னையில் இருக்கும் போது நீங்கள் #WhistlePodu!' என கூறியுள்ளது. கோலி, சென்னை அணியின் 'விசில் போடு' என்பதைக் குறிப்பிட்டு அப்படி கூறியுள்ளதால், இது தொடர்பான வீடியோ தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்