இது என்னடா புது புரளியா இருக்கு..! ‘இப்படியெல்லாம் கூடவா யோசிப்பாங்க’.. ரோஹித் உண்மையாவே அப்படி பண்ணாரா..? திடீரென புயலைக் கிளப்பும் போட்டோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கும், ரோஹித் ஷர்மாவுக்கு இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளதாக இணையத்தில் சர்ச்சை கிளம்பியுள்ளது.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை 3 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ளன. அதில் முதல் போட்டி டிராவில் முடிவடைந்தது. மற்ற இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றுள்ளன. இதனை அடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி வரும் செப்டம்பர் 6-ம் தேதி ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக சர்ச்சை கிளம்பியுள்ளது. கடந்த புதன் கிழமை லீட்ஸ் மைதானத்தில் 3-வது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. அதில் இந்திய அணி தங்களது முதல் இன்னிங்ஸில் 78 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 432 ரன்களை குவித்தது.

இதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி 278 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் 76 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியை சந்தித்தது. அப்போட்டியில் முகமது ஷமி வீசிய 108-வது ஓவரில் இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோ விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

உடனே வேகமாக ஓடிய கோலி, சக வீரர்களுடன் அதனை கொண்டாடினார். அப்போது ரோஹித் ஷர்மாவிடமும் கைதட்டி சந்தோஷத்தை வெளிப்படுத்தினார். ஆனால் ரோஹித் ஷர்மா கோலியின் கண்களை பார்க்கவில்லை என்றும், கடமைக்கு சிரித்ததாக சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அதனால் கோலி-ரோஹித் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டதாக சர்ச்சை கிளம்பியது.

இந்த சூழலில், இது சம்பந்தப்பட்ட வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு, சாதாரண விஷயத்தை மோதல் எனக் கூறி சிலர் புரளியை கிளப்புவதாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கடந்த 2019-ம் ஆண்டு நடந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரின் போது விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா இடையே மோதல் ஏற்பட்டதாக சர்ச்சை கிளம்பியது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்