'ரோஹித்' செஞ்ச அதே தப்ப, கோலியும் பண்ணியிருந்தாரா??..." புதிதாக எழுந்த 'சர்ச்சை'... சிக்கலில் 'இந்திய' அணி??

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் போட்டிகளை விளையாடி வரும் நிலையில் இன்னும் டெஸ்ட் போட்டிகளுடன் இந்த சுற்றுப்பயணம் முடிவடையவுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக, ஆஸ்திரேலியா சென்றிருந்த இந்திய வீரர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னரே பயிற்சியில் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டு அதன் பின்னர் போட்டிகளில் ஒன்றாக களமிறங்கினர். அதே போல, இந்திய கிரிக்கெட் வீரர்கள் வெளியே செல்லும் போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நிர்வாகம் அறிவுறுத்தப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றவும் கூறப்பட்டது.

இந்நிலையில், இந்திய அணி வீரர்களான ரோஹித் ஷர்மா, ரிஷப் பண்ட், ப்ரித்வி ஷா, சுப்மன் கில் மற்றும் நவ்தீப் சைனி ஆகியோர் கொரோனா விதிமுறைகளை மீறி வெளியேயுள்ள உணவகம் ஒன்றில் சென்றதாகவும், அங்கு ரசிகர் ஒருவரை கட்டிப் பிடித்ததாகவும் கூறி ஐந்து பேரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் மிகப்பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

முன்னதாக, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனக்கு குழந்தை பிறக்கவுள்ளதையொட்டி முதல் டெஸ்ட் போட்டியுடன் இந்தியா கிளம்பியிருந்தார். அவர் இந்தியா கிளம்புவதற்கு முன்பாக ஹர்திக் பாண்டியாவுடன் இணைந்து கடந்த டிசம்பர் மாதத்தில் சிட்னியிலுள்ள கடை ஒன்றிற்கு சென்றதாகவும், அங்கு முகக்கவசங்கள் எதுவும் அணியாமல் ரசிகை ஒருவருடன் புகைப்படம் எடுத்ததாகவும் கூறி தற்போது சர்ச்சை ஒன்று கிளம்பியுள்ளது. இதகுறித்த புகைப்படம் ஒன்றையும் ஆஸ்திரேலியா நாளிதழ் வெளியிட்டு செய்தியை குறிப்பிட்டுள்ளது.

கோலியும் இந்தியா கிளம்புவதற்கு முன்னர், கொரோனா விதிமுறைகளை மீறி செயல்பட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ரோஹித் ஷர்மா உட்பட ஐந்து வீரர்கள் கொரோனா விதிகளை மீறி வெளியே சென்றிருந்தது பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், கோலியின் செயலும் தற்போது அதிக சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்