"எது, இனிமே மும்பை இந்தியன்ஸ்-க்கு சப்போர்ட்டா??.." கோலி பகிர்ந்த விஷயம்.. கூடவே டு பிளெஸ்ஸிஸ் ஒண்ணு பண்ணாரு பாருங்க.. வைரல் வீடியோ

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

15 ஆவது ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள், ஏறக்குறைய இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது. இதுவரை 67 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய அணிகள் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | அப்பாவை காணோம் என புகார் கொடுத்த மகள்.. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்.. சென்னையில் ஷாக்..!

இன்னொரு பக்கம், கொல்கத்தா, பஞ்சாப், ஹைதராபாத், சென்னை மற்றும் மும்பை ஆகிய அணிகள், பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்து விட்டது.

இன்னும் இரண்டு இடங்கள், பிளே ஆப் சுற்றுக்கு உள்ள நிலையில், ராஜஸ்தான், பெங்களூர் மற்றும் டெல்லி ஆகிய அணிகளுக்கு வாய்ப்பு உள்ளது.

வாய்ப்பை தக்க வைத்த ஆர்சிபி

நேற்று (19.05.2022) குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக, தங்களின் கடைசி லீக் போட்டியில் பெங்களூர் அணி மோதி இருந்தது. இதில், வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்று வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற நிலையில், பெங்களூர் அணி களமிறங்கி இருந்தது. முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி, 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்திருந்தது.

தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய பெங்களூர் அணியின் தொடக்க வீரர்களான பாப் டு பிளெஸ்ஸிஸ் மற்றும் விராட் கோலி ஆகியோர் சிறப்பாக ஆடி ரன் சேர்த்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 115 ரன்கள் சேர்க்க, கடைசியில் மேக்ஸ்வெல்லும் அதிரடி காட்ட, இரண்டு விக்கெட்டுகள் மட்டுமே இழந்து, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது பெங்களூர் அணி.

அந்த அணியின் நட்சத்திர வீரரான கோலி, நடப்பு ஐபிஎல் தொடரில் தடுமாறி வந்த நிலையில், குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 73 ரன்கள் அடித்து ஃபார்முக்கு வந்துள்ளது, ரசிகர்கள் மத்தியில் அதிக நம்பிக்கையை ஏற்படுத்தி இருந்தது. அதே போல, 14 லீக் போட்டிகள் ஆடி முடித்துள்ள ஆர்சிபி, 8 போட்டிகளில் வெற்றி பெற்று, நான்காம் இடத்தில் உள்ளது.

மும்பை ஜெயிக்கணும்..

மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகள் நாளை (21.05.2022) மோதும் போட்டியில், டெல்லி அணி வெற்றி பெற்றால், பெங்களூர் அணியின் பிளே ஆப் வாய்ப்பு, பறி போய் விடும். இதனால், மும்பை அணி வெற்றி பெற வேண்டும் என ஆர்சிபி அணியினர் மற்றும் ரசிகர்கள் கருதி வருகின்றனர்.

கோஷம் போட்ட டு பிளெஸ்ஸிஸ்

அந்த வகையில், நேற்று போட்டி முடிந்த பின்னர், கோலி மற்றும் பாப் டு டுபிளெஸ்ஸிஸ் பேசிய விஷயம் ஒன்று, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் பேசிய கோலி, "நாங்கள் மும்பை அணிக்கு ஆதரவாக இருக்க உள்ளோம். நாங்கள் இரண்டு பேர் மட்டும் அல்ல, எங்கள் அணியின் 25 பேரும் மும்பை அணிக்கு தான் ஆதரவளிக்க உள்ளோம். நீங்கள் நாளைய போட்டியில், எங்களை மைதானத்தில் கூட பார்க்கலாம்" என கூற, மறுபக்கம் "மும்பை, மும்பை" என உற்சாகத்துடன் கோஷம் எழுப்பினார் டு பிளெஸ்ஸிஸ்.

மும்பை அணி வெற்றி பெற்றால், ஆர்சிபி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்பதால், மும்பை அணிக்கு ஆதரவாக கோலி மற்றும் டு பிளெஸ்ஸிஸ் தெரிவித்த கருத்து, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
 

 

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

CRICKET, VIRAT KOHLI, FAF DU PLESSIS, MUMBAI INDIANS, IPL 2022

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்