'ஜெர்சி'யில் பெயர்களை மாற்றிக் கொண்ட 'கோலி', 'டிவில்லியர்ஸ்',,.. "இனி இந்த சீசன் ஃபுல்லா இப்டித்தான்,,," - 'காரணம்' என்ன??

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் போட்டிகள் ஊரடங்கு காரணமாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் நிலையில், இன்றைய போட்டியில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியும் மோதுகின்றன.

இந்நிலையில், பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் அந்த அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஏபி டிவில்லியர்ஸ் ஆகியோர் தங்கள் ஜெர்சியில் பெயரை மாற்றியுள்ளதுடன், அவரவர் ட்விட்டர் பக்கங்களின் பெயர்களையும் மாற்றியுள்ளனர்.

கோலி தனது ட்விட்டர் பக்கம் மற்றும் ஜெர்சியில் பெயரை சிம்ரன்ஜித்  என மாற்றியுள்ளார். இந்த பெயர் மாற்றத்திற்கு காரணம், மாற்றுத்திறனாளியான சிம்ரஞ்சித் சிங் என்பவர், கொரோனா ஊரடங்கு சமயத்தில் சுமார் 98 ஆயிரம் ரூபாய் வரை நிதி திரட்டி பலருக்கு உணவு அளித்து வந்துள்ளார்.

அதே போல, மற்றொரு வீரரான டிவில்லியர்ஸ், ட்விட்டர் பக்கத்தில் பரிதோஷ் பந்த் (Paritosh Pant) என பெயரை மாற்றியுள்ளார். இந்த பரிதோஷ் பந்த், ஊரடங்கு காலத்தில் தினமும் இரண்டு ஏழை மக்களுக்கு உணவளித்து வந்துள்ளார். இவர்களை பாராட்டும் விதமாக, இந்த ஐபிஎல் சீசன் முழுவதும் கோலி மற்றும் டிவில்லியர்ஸ் ஆகியோர் இதே ஜெர்சியுடன் தான் ஆடவுள்ளனர். இது தொடர்பாக, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றையும் டிவில்லியர்ஸ் பகிர்ந்துள்ளார். 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்