திடீரென கே.எல்.ராகுலை கூப்பிட்டு ‘அட்வைஸ்’ பண்ண கோலி.. அப்படின்னா பாகிஸ்தான் வீரர் சொன்னது உண்மையா..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் நடப்பு கேப்டன் கே.எல்.ராகுலுக்கு விராட் கோலி அறிவுரை வழங்கிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

Advertising
>
Advertising

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு இடையேயான கடைசி ஒருநாள் போட்டி நேற்று கேப்டவுன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 49.5 ஓவர்களில் 287 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதில் அதிகபட்சமாக டி காக் 124 ரன்களும், வான் டெர் டஸ்ஸன் 52 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியை பொறுத்தவரை பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளும், பும்ரா மற்றும் தீபக் சஹர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், சஹால் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இதனை அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி 49.2 ஓவர்களில் 283 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதனால் 4 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி த்ரில் வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக விராட் கோலி 65 ரன்களும், ஷிகர் தவான் 67 ரன்களும், தீபக் சஹர் 54 ரன்களும் எடுத்தனர். இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றதன் மூலம் 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றியது.

தற்போது கேப்டன் ரோகித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், ஒருநாள் தொடரில் அவர் விளையாடவில்லை, அதனால் ஒருநாள் தொடருக்கு கே.எல்.ராகுல் நடப்பு கேப்டனாக நியமிக்கப்பட்டார். கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். டேவிட் மால், டெம்பா பவுமா, ஏய்டன் மார்க்ரம் ஆகிய தென் ஆப்பிரிக்க அணியின் முக்கிய கட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தினர். இதனால் 70 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை தென் ஆப்பிரிக்கா இழந்தது.

இந்த சமயத்தில் ஜோடி சேர்ந்த டி காக் மற்றும் வான் டெர் டஸ்ஸன் கூட்டணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதனால் இவர்கள் இருவரையும் அவுட்டாக முடியாமல் நீண்ட நேரமாக இந்திய அணி திணறியது. அதனால் போட்டி கைநழுவி செல்வதை உணர்ந்த விராட் கோலி, வேகமாக நடப்பு கேப்டன் கே.எல்.ராகுலிடம் சென்று பில்டிங்கை செட் செய்வது குறித்து அறிவுரை வழங்கினார். இதற்கு கே.எல்.ராகுல் ஏதோ விளக்கம் அளிக்க முயன்றார். இதனால் சற்று கோபமான விராட் கோலி, சில அறிவுரைகளை வழங்கி விட்டு அங்கிருந்து சென்றார்.

இதனை அடுத்து பிரசித் கிருஷ்ணா வீசிய கடைசி ஓவர்களில் 2 விக்கெட்டுகள் விழுந்தது. இந்த இரண்டு விக்கெட்டையும் பவுண்டரி லைனில் நின்ற விராட் கோலியே கேட்ச் பிடித்து வீழ்த்தினார். வழக்கமாக ஒரு விக்கெட் விழுந்தால் அனைத்து வீரர்களும் சென்று சம்பந்தப்பட்ட வீரரை பாராட்டுவது வழக்கம். ஆனால் விராட் கோலி கேட்ச் பிடித்ததும் பந்தை தூக்கி வீசிவிட்டு யாரிடமும் பேசாமல் திரும்பி சென்றுவிட்டார். மற்ற வீரர்களும் இந்த இரு விக்கெட்டுகளையும் பெரிதாக கொண்டாடவில்லை.

இதனால் அணியில் விரிசல் ஏற்பட்டுவிட்டதா? என நெட்டிசன்கள் பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பினர். கடைசி ஓவர் என்பதால் வீரர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபடாமல் இருந்திருக்கலாம் என ரசிகர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். சில தினங்களுக்கு முன்பு பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் டேனிஷ் கனேரியா (Danish Kaneria), இந்திய அணி விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் தலைமையில் இரு அணிகளாக பிரிந்துள்ளது என சர்ச்சையை கருத்தை கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தன்னோட இடம் பறிபோயிடும்னு ருத்ராஜ் மேல K L ராகுலுக்கு பயம்... டிவிட்டரில் வறுத்தெடுத்த நெட்டிசன்கள்

3 பேருக்கும் ஒரே மாதிரி நெற்றியில் பொட்டு.. திரும்பி இருந்த ஃபோட்டோ.. இறந்து கிடந்த குடும்பம்.. அமான்ஷ்ய சடங்கு நடந்ததா?

VIRATKOHLI, KLRAHUL, INDVSA, பாகிஸ்தான் வீரர்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்