'பொல்லார்ட்' வந்ததும் 'கோலி' சொன்ன ரகசியம்.. மறுகணமே மைதானத்தில் நடந்த 'மேஜிக்'.. "வேற லெவல்யா கிங் கோலி"

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே, நேற்று நடைபெற்ற முதல் போட்டியில், இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

Advertising
>
Advertising

VIDEO: யாருங்க சொன்னது ரெண்டு பேருக்கும் சண்டைன்னு.. இந்த வீடியோ பாருங்க தெரியும்..!

இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று ஒரு நாள் போட்டி கொண்ட தொடர் நேற்று ஆரம்பமானது. தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில், காயம் காரணமாக விலகியிருந்த ரோஹித் ஷர்மா, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில், தேர்வாகியிருந்தார்.

அது மட்டுமில்லாமல், குறைந்த ஓவர் போட்டிகளில் (ஐம்பது ஓவர் மற்றும் டி 20) இந்திய அணியின் கேப்டனாகவும் ரோஹித் ஷர்மா நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்திய அணி அவர் தலைமை தாங்கிய முதல் ஒரு நாள் போட்டி, இந்திய அணியின் 1000 ஆவது ஒரு நாள் போட்டியாகும்.

தடுமாறிய வெஸ்ட் இண்டீஸ் அணி

எந்த அணியும் எட்டாத சிறப்பான மைல்கல்லை, ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி, காலடி எடுத்து வைத்தது. நேற்றைய போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்திருந்தது. இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாத வெஸ்ட் இண்டீஸ் அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

வென்று அசத்திய இந்திய அணி

இதனால், 44 ஆவது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 176 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி, 28 ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டுமே  இழந்து வெற்றி பெற்றிருந்தது. அதிகபட்சமாக, கேப்டன் ரோஹித் ஷர்மா 60 ரன்கள் எடுத்திருந்தார்.

ரோஹித் - கோலி

இதனால், 3 ஒரு நாள் போட்டி கொண்ட தொடரை, இந்திய அணி 1 - 0 என முன்னிலை வகிக்கிறது. இந்த போட்டியில் ஒரு அணியாக இந்தியா சிறப்பாக செயல்பட்டிருந்தது. கேப்டன் பதவியில் இல்லமால் இருந்தால் கூட, ரோஹித்துடன் இணைந்து, கோலி எடுத்த பல முடிவுகள், இந்திய அணிக்கு வெற்றிகளையும் தேடித் தந்தது.

கோலியின் மேஜிக்

இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களும் அதிகம் வைரலாகி வந்தது. அந்த வகையில், கோலி பேசிய மற்றொரு வீடியோவும், இணையத்தில் அதிகம் லைக்குகளை அள்ளிக் குவித்து வருகிறது. வெஸ்ட்  இண்டீஸ் அணி பேட்டிங் கொண்டிருந்த போது, நிக்கோலஸ் பூரான் அவுட் ஆனதும், அந்த அணியின் கேப்டன் பொல்லார்ட் பேட்டிங் செய்வதற்கு வந்தார்.

நடையைக் கட்டிய பொல்லார்ட்

அப்போது, பந்து வீசிக் கொண்டிருந்த சாஹலிடம், 'பொல்லார்ட்டிற்கு கூக்லி பந்து வீசு' என ஹிந்தியில் கோலி கூறினார். அதன் படி, சாஹலும், கூக்லி பந்தினை வீச, முதல் பந்திலேயே போல்டாகி நடையைக் கட்டினார் பொல்லார்ட். அதிரடி வீரரான பொல்லார்ட் களத்தில் நின்றிருந்தால், நிச்சயம் வெஸ்ட் இண்டீஸ் அணி, அதிக ரன்களை குவித்திருக்கும்.

பாராட்டும் ரசிகர்கள்

ஆனால், அவர் வந்த வேகத்திலேயே ஆட்டமிழக்கச் செய்ய, கோலி சொன்ன விஷயம், மைக் ஆடியோவில் பதிவாகி, ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது. கேப்டன் பதவியில் இருந்து விலகினாலும், அணியினருக்கும், கேப்டன் ரோஹித் ஷர்மாவிற்கும் தொடர்ந்து உத்வேகம் அளித்து வரும் கோலியை கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

VIDEO: பாவங்க மனுசன்.. இப்டி ‘அவுட்’ ஆவோம்னு கொஞ்சம் கூட நெனச்சிருக்க மாட்டாரு.. சோகமாக வெளியேறிய ரிஷப் பந்த்..!

VIRAT KOHLI, ADVICE, CHAHAL, POLLARD, GOLDEN DUCK, WEST INDIES, INDIA VS WEST INDIES, ரோஹித், கோலி, வெஸ்ட் இண்டீஸ்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்