"என்கிட்ட என்ன கேக்க போறீங்க?.." ஜாஸ் பட்லர் பேச வந்ததும்.. கோலி சொன்ன விஷயம்.. செம வைரல்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநடப்பு ஐபிஎல் தொடர், தற்போது இறுதிக் கட்டத்தை எட்டி விட்டது. குஜராத், லக்னோ, ராஜஸ்தான் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், நான்காவது அணி எது என்பதை மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு பின்னர் தான் முடிவு எடுக்க முடியும்.
இந்த போட்டியில், மும்பை அணி வெற்றி பெற்றால், பெங்களூர் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும். ஒரு வேளை, டெல்லி அணி வென்றால், அவர்களே பிளே ஆப் சுற்றுக்கும் சென்று விடுவார்கள்.
இதனால், நாளை (21.05.2022) நடைபெறவுள்ள மும்பை மற்றும் டெல்லி அணிக்கு இடையே நடக்கும் போட்டியைக் காண ரசிகர்களும் ஆவலாக உள்ளனர்.
அசத்தல் வெற்றி பெற்ற ஆர்சிபி
முன்னதாக, பெங்களூர் அணி தங்களின் கடைசி லீக் போட்டியில், குஜராத் அணியுடன் மோதி இருந்தது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தான், பிளே ஆப் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற சூழ்நிலையில், பெங்களூர் அணி களமிறங்கி இருந்தது. 169 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய பெங்களூர் அணி, 19 ஆவது ஓவரில் இலக்கை எட்டிப் பிடித்து அசத்தி இருந்தது.
ஜோஸ் பட்லர் கேட்ட கேள்வி
நடப்பு ஐபிஎல் சீசனில், பெரிதாக ரன்கள் குவிக்காமல் இருந்து வந்த கோலி, இந்த போட்டியில் 73 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருதினையும் பெற்றிருந்தார். இதனால், கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் கடும் உற்சாகத்தில் உள்ளனர். இந்நிலையில், ராஜஸ்தான் அணியில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் குறித்து, விராட் கோலி சொன்ன விஷயம் ஒன்று, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
கோலி சொன்ன பதில்
நடப்பு சீசனில், 3 சதங்களுடன் மொத்தம் 14 போட்டிகள் ஆடி, 629 எடுத்துள்ள ஜோஸ் பட்லர், ஆரஞ்ச் கேப்பையும் தன வசம் வைத்துள்ளார். ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக ஆடி பலரையும் தன் பக்கம் திருப்பி இருந்தார் பட்லர். அப்படி ஒரு சூழலில், பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு பின்னர் நடந்த விஷயம் பற்றி பேசிய கோலி, "அந்த போட்டி முடிவடைந்த பின்னர், என்னருகே வந்த பட்லர், உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும் என கூறினார். பதிலுக்கு நான் அவரிடம், நீங்கள் ஆரஞ்ச் கேப் அணிந்துள்ளீர்கள். நான் ரன் அடிக்க முடியாமல் தடுமாறி வருகிறேன்.
என்னிடம் நீங்கள் என்ன கேட்க போகிறீர்கள் என கிண்டலாக கூறினேன். தொடர்ந்து, இருவரும் சிரித்த படி நின்றோம். பின்னர் பேட்டிங்கிலுள்ள சிறிய சிறிய நுணுக்கங்கள் பற்றி இருவரும் பேசினோம்" என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- VIDEO: ‘அய்யோ.. என்னா அடி’.. இளம் தமிழக வீரர் மீது பலமாக மோதி கீழே விழுந்த கோலி..!
- என்னய்யா இது .. ‘பந்து ஸ்டம்பில் பட்டும் இப்படி ஆகிடுச்சு...’.. எஸ்கேப் ஆன மேக்ஸ்வெல்.. நொந்துபோன ரஷித் கான்..!
- #Definitelynot திடீர்னு ட்ரண்ட் ஆகும் ஹேஷ்டேக்… தோனி என்ன சொல்ல போகிறார்? காத்திருக்கும் ரசிகர்கள்
- IPL இறுதிப்போட்டியில் திடீர் மாற்றம்.. 30 நிமிஷம் லேட்டா தான் மேட்ச் ஆரம்பிக்கும்.. என்ன காரணம்..?
- "எது, இனிமே மும்பை இந்தியன்ஸ்-க்கு சப்போர்ட்டா??.." கோலி பகிர்ந்த விஷயம்.. கூடவே டு பிளெஸ்ஸிஸ் ஒண்ணு பண்ணாரு பாருங்க.. வைரல் வீடியோ
- “இந்த மாதிரி மேட்சுக்கெல்லாம் எனக்கு அதிக சம்பளம் தரணும்”.. எதுக்காக KL ராகுல் இப்படி சொன்னார்..?
- மைதானத்தில்.. திடீரென அதிர்ச்சியில் உறைந்த சச்சின் மகள்.. வைரலாகும் புகைப்படம்.. 'பின்னணி' என்ன??
- 'Playoff' போனதுல ஒரே குஷியோ.. தமிழ் பசங்க கூட சேர்ந்து.. ஹர்திக் பாண்டியா பாடிய தமிழ் பாடல்.. வைரல் வீடியோ!!
- "இந்த டீம்கள்ல இருந்து அந்த ரெண்டு ப்ளேயர்ஸ் இந்திய அணிக்கு ஆடுவாங்க" - BCCI தலைவர் கங்குலி சொன்ன சூப்பர் தகவல்!
- லட்டு மாதிரி கெடச்ச சான்ஸ்.. இப்படி மிஸ் பண்ணிட்டாரே.. கிரேட் எஸ்கேப் ஆன தவான்..!