"இது எல்லாத்துக்கும் காரணம் அந்த ஒருத்தரு தான்".. 71 ஆவது சதத்திற்கு பின் கோலி உடைத்த சீக்ரெட்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆசிய கோப்பை தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சூப்பர் ஃபோர்ஸ் சுற்றில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி போட்டியில், தனது 71 ஆவது சர்வதேச சதத்தை அடித்து அசத்திக் காட்டி உள்ளார் விராட் கோலி.

Advertising
>
Advertising

முன்னதாக, லீக் சுற்று போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் ஆகிய அணிகளை வீழ்த்தி சூப்பர் ஃபோர்ஸ் சுற்றுக்கும் இந்திய அணி முன்னேற்றம் கண்டிருந்தது.

ஆனால், பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிராக சூப்பர் ஃபோர்ஸ் சுற்று போட்டியில் அடுத்தடுத்து தோல்விகளை தழுவியதால், இறுதி போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பையும் இந்திய அணி இழந்தது.

அப்படி ஒரு சூழ்நிலையில், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக தற்போது இந்திய அணி மோதி வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரராக களமிறங்கிய விராட் கோலி, சுமார் 1000 நாட்கள் கழித்து, 84 இன்னிங்ஸ்களுக்கு பிறகு சர்வதேச போட்டியில் சதம் ஒன்றை அடித்துள்ளார்.

ஆசிய கோப்பைக்கு முன்பாகவே கோலி பேட்டிங் மீது கடும் விமர்சனம் எழுந்து வந்தது. ஆனால், ஆசிய கோப்பையில் தொடர்ந்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கோலி, தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 122 ரன்கள் எடுத்து தான் 'King' என்பதை நிரூபித்துள்ளார். தனது 71 ஆவது சர்வதேச சதத்தை கோலி பூர்த்தி செய்துள்ள நிலையில், ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தனது பேட்டிங்கிற்கு பிறகு பேசிய விராட் கோலி, "நான் இங்கே நிற்பதை நீங்கள் பார்க்கிறீர்கள் என்றால், எனக்காக முழுவதும் ஆதரவாக நின்ற ஒருவரால் தான். அது தான் அனுஷ்கா ஷர்மா. இந்த சதம் அனுஷ்காவுக்கும் எங்களின் மகள் வாமிகாவுக்கும் சமர்ப்பணம்" என குறிப்பிட்டுள்ளார்.

VIRATKOHLI, ASIA CUP 2022, AFG VS IND, 71ST CENTURY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்