புது ரெக்கார்டு படைக்க போகும் கோலி & AB டிவில்லியர்ஸ்.. நட்பின் இன்னொரு மைல்கல்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தென்னாப்பிரிக்காவின் அதிரடி பேட்ஸ்மேனான ஏபி டிவில்லியர்ஸ் மற்றும் இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி இடையேயான நட்பு குறித்து கிரிக்கெட் உலகமே அறியும். களத்திலும் சரி, வெளியேயும் சரி இந்த இரு அதிரடி ஆட்டக்காரர்களின் நட்பு இன்றுவரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில், டெஸ்ட் போட்டியில் வித்தியாசமான சாதனை ஒன்றினை படைக்க இருக்கிறார்கள் இந்த நண்பர்கள்.

Advertising
>
Advertising

ஏபி டிவில்லியர்ஸ்

2004 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக தனது முதல் போட்டியில் விளையாடினார் ஏபி டிவில்லியர்ஸ். ஆரம்பத்தில் பேட்டிங்கில் சுமாராக விளையாடிய இவர் அதன்பின்னர் பவுலர்களின் சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். வீசப்படும் பந்துகளை கிரவுண்டின் அனைத்து திசைகளிலும் தெறிக்க விடுவதால் இவரை கிரிக்கெட் ரசிகர்கள் மிஸ்டர் 360 என செல்லமாக அழைக்கிறார்கள். விக்கெட் கீப்பராக அறியப்படும் டிவில்லியர்ஸ் ஆரம்பத்தில் பவுலிங்கும் போட்டிருக்கிறார்.

இதுவரையில் 228 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 9577ரன்களை குவித்துள்ளார். இதில் 25 சதங்களும் 53 அரை சதங்களும் அடக்கம். 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் விளையாடிய டிவில்லியர்ஸ் 184 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார். முதலில் டெல்லி அணிக்காக விளையாடிய இவர் பின்னர் 2011 ஆம் ஆண்டு முதல் பெங்களூரு அணிக்காக விளையாடினார். ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெரும் வரையில் அதே அணியில் நீடித்தார். இதனால் பெங்களூரு அணியின் செல்லப் பிள்ளை என்றே கிரிக்கெட் ரசிகர்கள் டிவில்லியர்ஸை குறிப்பிடுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் பெங்களூரு அணியின் முன்னாள் கேப்டன் - டிவில்லியர்ஸ் இடையேயான நட்பு கிரிக்கெட் உலகில் மிகவும் பிரபலம்.

டெஸ்ட் போட்டி

டிவில்லியர்ஸ் தனது 98 வது டெஸ்ட் போட்டியை தென்னாப்பிரிக்காவில் உள்ள கேப்டவுனிலும் 99 வது போட்டியை மொஹாலியிலும் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் 100 வது டெஸ்ட் போட்டியிலும் விளையாடினார். இவருடைய ஜெர்சி எண் 17 ஆகும்.

அதேவேளையில் 18 எண் கொண்ட ஜெர்சியை அணியும்  விராட் கோலி, தனது  99 வது டெஸ்ட் போட்டியை தென்னாப்பிரிக்காவில் உள்ள கேப்டவுனிலும்  100 வது போட்டியை மொஹாலியிலும் 101 வது டெஸ்ட் போட்டியை பெங்களூரிலும் விளையாட இருக்கிறார். இப்படி தங்களை அறியாமலே இந்த சாதனையை படைக்க இருக்கிறது விராட் கோலி - டிவில்லியர்ஸ் இணை.

இந்நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் இந்த விஷயம் குறித்து வைரலாக பேசி வருகின்றனர்.

CRICKET, VIRATKOHLI, ABD, TESTMATCH, ஏபிடிவில்லியர்ஸ், விராட்கோலி, டெஸ்ட்போட்டி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்