தோல்வியிலும் கோலிக்கு மட்டும் நடந்த ‘நல்ல’ விஷயம்.. 4 வருசத்துக்கு முன்னாடி பண்ண தரமான சம்பவம் ஞாபகம் இருக்கா..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வியைத் தழுவியது.

Advertising
>
Advertising

தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது.

இதனை அடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.

இதனைத் தொடர்ந்து இன்று (21.01.2022) இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 287 ரன்களை எடுத்தது. இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 48.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 288 ரன்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் தென் ஆப்பிரிக்க அணி தக்கவைத்துள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட விராட்கோலி தலைமையிலான இந்திய அணி, 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 5-1 என்ற கணக்கில் வென்று வரலாறு படைத்தது. அதற்கு முன்பு வரை தென் ஆப்பிரிக்க மண்ணில் இந்தியா ஒருநாள் தொடரை கைப்பற்றியது கிடையாது. தற்போது நடந்து முடிந்த ஒருநாள் தொடரையும் இந்தியா நழுவவிட்டு உள்ளது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்க மண்ணில் ஒருநாள் தொடரை வென்ற ஒரே இந்திய கேப்டன் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.

தற்போது அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் விராட் கோலி தனது கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார். அதனால் டி20 மற்றும் ஒருநாள் அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது ரோகித் சர்மா காயம் காரணமாக விளையாடாமல் இருப்பதால், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு கே.எல்.ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIRATKOHLI, INDVSA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்