Fake Fielding செய்தாரா கோலி?.. கிரிக்கெட் உலகில் பரபரப்பை கிளப்பிய விவாதம்.. பின்னணி என்ன??
முகப்பு > செய்திகள் > விளையாட்டுவிராட் கோலி ஃபீல்டிங் செய்தது தொடர்பாக இணையத்தில் பேசு பொருளாக மாறி உள்ள விவகாரம், கிரிக்கெட் வட்டாரத்தில் அதிக சலசலப்பை உண்டு பண்ணி உள்ளது.
சூப்பர் 12 சுற்றில் குரூப் 2 வில் இந்திய அணி இடம்பெற்றுள்ளது. இதுவரை நான்கு போட்டிகள் விளையாடியுள்ள இந்திய அணி, பாகிஸ்தான், நெதர்லாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு எதிராக வெற்றி பெற்றுள்ளது. மறுபக்கம், தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக நடந்த போட்டியில் மட்டும் இந்திய அணி தோல்வி அடைந்திருந்தது.
இதில், பங்களாதேஷ் அணிக்கு எதிராக நேற்று (03.11.2022) நடந்த போட்டியில் கோலி பீல்டிங் செய்த விதம் தான் அதிக விவாதத்தை உண்டு பண்ணி உள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய பங்களாதேஷ் அணியின் தொடக்க வீரர் லிட்டன் தாஸ் ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக ஆடி ரன் சேர்த்தார். 7 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 66 ரன்களை பங்களாதேஷ் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. தொடர்ந்து 16 ஒவர்களில் 151 ரன்கள் என்ற இலக்கும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
கடைசி ஓவரில், 20 ரன்கள் தேவைப்பட அந்த ஓவரில் 14 ரன்களை மட்டும் தான் பங்களாதேஷ் எடுத்திருந்தது. இதனால், 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது. முன்னதாக பங்களாதேஷ் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது ஏழாவது ஓவரை அக்சர் படேல் வீசி இருந்தார்.
அப்போது லிட்டன் தாஸ் அடித்த பந்து நேராக அர்ஷ்தீப் சிங் கைக்குச் சென்றது. அவர் பந்தை எறிய அது கோலியை தாண்டிய போது பந்தை பிடிக்காமல் பிடித்தது போலவும், ஸ்டெம்பை நோக்கி எறிவது போலவும் விராட் கோலி வேடிக்கையாக பாவனை செய்ததாக தெரிகிறது. அந்த சமயத்தில் இந்த சம்பவத்தை கள நடுவர்கள் கவனிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதுதான் தற்போது மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து பேசி இருந்த வங்கதேச அணி வீரர் நூருல் ஹசன், "இதற்கு ஐந்து ரன்கள் தண்டனையாக கொடுத்திருக்கலாம். அது எங்களுக்கு சாதகமாக முடிந்திருக்கும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது நடக்கவில்லை" என குறிப்பிட்டுள்ளார். அதே போல, இதுகுறித்து ட்வீட் செய்திருந்த பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே, "ஃபேக் பீல்டிங் விஷயத்தை நடுவர்கள், பேட்ஸ்மேன்கள், ஏன் நாம் கூட அதனை கவனிக்கவில்லை என்பது தான் உண்மை. ஐசிசி விதி 41.5 படி ஃபேக் ஃபீல்டிங்கை தண்டிக்க வழி செய்கிறது. ஆனால் யாருமே அதை பார்க்காத போது என்ன செய்ய முடியும்" என குறிப்பிட்டுள்ளார்.
ஹர்ஷாவை போல தான் ரசிகர்கள் பலரும் விராட் கோலி செய்ததை பேட்ஸ்மேன்கள் பார்த்திருந்தால் தான் அது அவர்களுக்கு கவன சிதறலை ஏற்படுத்தி இருக்கும் என்றும் அப்படி பார்க்காத போது எப்படி அதற்கு பெனால்டி கொடுப்பது என்றும் குறிப்பிட்டு வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "இந்தியா தோத்தா ஜிம்பாப்வே நாட்டை சேர்ந்தவர கல்யாணம் பண்றேன்".. நடிகையின் பரபரப்பு ட்வீட்!!
- “செம்ம Edit".. பரபரக்க வைத்த இந்தியா-வங்கதேச மேட்ச்.. இயக்குனர் வெங்கட் பிரபு பகிர்ந்த வீடியோ.. பக்காவா பொருந்துதே..!
- விராட் கோலி வெச்ச அப்பீல்.. அடுத்த கணமே அவருகிட்ட ஓடி வந்த ஷகிப்.. பரபரப்பு நிமிடங்கள்!!
- KL ராகுலின் இமாலய சிக்ஸ்.. எதிரே நின்ன விராட் கோலி கொடுத்த ரியாக்ஷன்.. வைரலாகும் வீடியோ..!
- இந்தியா ஸ்கோர் என்ன?.. தவித்த பயணி.. விஷயம் கேள்விப்பட்டு விமானி கொடுத்த ரிப்ளை.. வைரல் Pic..!
- "சிக்ஸ்ன்னு தான் நெனச்சு இருப்பாங்க".. பவுண்டரி லைனில் நடந்த மேஜிக்.. மெய்சிலிர்த்து போன ரசிகர்கள்!!.. வீடியோ!!
- "அந்த ஒரு சிக்ஸ்".. அடிச்சு முடிச்சதும் கோலி கொடுத்த ரியாக்ஷன்.. "பாத்த எங்களால கூட நம்ப முடியல".. மிரள வைத்த ஷாட்!!
- T20 World Cup : ஆறிப் போன உணவை புறக்கணித்த இந்திய கிரிக்கெட் வீரர்கள்??.. சேவாக் போட்ட பரபரப்பு ட்வீட்!!
- "தோனி சொன்னது நடந்துரும் போலயே".. மீண்டும் நடக்கும் 2011 WC மேஜிக்?.. "அப்போ இந்தியாவுக்கு தான் கப்பா?".. ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள்!!
- "சந்திரமுகியா மாறுன கோலிய பாத்தேன்".. வின்னிங் ரன் அடிக்குறதுக்கு முன்னாடி என்ன நடந்துச்சு??.. அஸ்வின் பகிர்ந்த தகவல்