மனுசன் பேட்டிங்கில் எல்லாம் ‘கில்லாடி’ தான்.. ஆனா அந்த விஷயத்துலதான் ‘கோலி’ கோட்டை விட்றாரு.. முன்னாள் வீரர் விமர்சனம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கில் சாதனையை நிகழ்த்தியதுபோல் கேப்டன்சியில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என முன்னாள் வீரர் விமர்சனம் செய்துள்ளார்.

Advertising
>
Advertising

ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி இதுவரை 3 போட்டிகளில் விளையாடி 1-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதிலும் முதல் 2 போட்டிகளில் மோசமாக தோல்வியடைந்ததால், நெட் ரன்ரேட் வெகுவாக குறைந்துள்ளது. இன்னும் 2 போட்டிகளே உள்ள நிலையில், இந்திய அணி அரையிறுதிக்கு நுழைவது கேள்விக்குறியாகியுள்ளது.

மற்ற கிரிக்கெட் தொடர்களில் சிறப்பாக விளையாடும் இந்திய அணி, உலகக்கோப்பை போன்ற முக்கியமான தொடர்களில் தொடர்ந்து சொதப்பி வருகிறது. இதனால் கேப்டன் விராட் கோலி மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இதுவரை விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, ஒரு ஐசிசி கோப்பையை கூட கைப்பற்றவில்லை.

இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மான்டி பனேசர், விராட் கோலியின் கேப்டன்சி குறித்து விமர்சனம் செய்துள்ளார். அதில், ‘விராட் கோலி ஒரு சிறந்த பேட்ஸ்மேன் என்பது எல்லாரும் அறிந்ததே. சேஸிங் செய்வதில் அவர் அற்புதமான வீரராக திகழ்கிறார். ஆனால் கேப்டன்சியில் அவரால் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை என்பதுதான் உண்மை’ எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘இந்தியா அரையிறுதிக்கு செல்லவேண்டுமென்றால், அடுத்து வரும் 2 போட்டிகளில் அபார வெற்றியை பெற வேண்டும். அதேபோல் நியூஸிலாந்து அணி ஏதாவது ஒரு போட்டியில் தோல்வியடைந்தால் தான் இந்தியாவின் அரையிறுதி கனவு நிறைவேறும். என்னைப் பொறுத்தவரை கோலியால் இந்தியாவை அரையிறுதிக்கு அழைத்துச் செல்வது கஷ்டம் தான்’ என மான்டி பனேசர் கூறியுள்ளார்.

VIRATKOHLI, TEAMINDIA, CAPTAIN, T20WORLDCUP

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்