‘கோலி செஞ்சது சரியா?’.. கிரவுண்டில் காண்டான அஸ்வின் அதுக்கப்புறம் என்ன சொன்னார் தெரியுமா?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடரின் 42வது போட்டி, பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நிகழ்ந்தது. இதில் முதலில் டாஸ் வென்ற, அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

பெங்களூர் அணியுடனான நேற்றைய போட்டியில் விராட் கோஹ்லி தன்னை திட்டியதை பெரிதாக எடுத்து கொள்ள தேவை இல்லை என அஸ்வின் தெரிவித்துள்ளார். ஐ.பி.எல் டி.20 தொடரின் 12வது சீசன் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மிக பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது.

இதனால் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து, 202 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து வெற்றி இலக்காக 203 ரன்களை முன்வைத்து இறங்கிய பஞ்சாப் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியிடம் தோல்வியடைந்தது.

பரபரப்பாக நிகழ்ந்த இந்த போட்டியில், கடைசி ஒரு ஓவருக்கு 22 ரன்கள் தேவை என்றிருந்த சூழலில், பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் இறங்கி கடைசி ஓவரின் முதல் பந்தை சிக்ஸருக்கு தூக்கினார். அதுவும் சிக்ஸரானது. உடனே அந்த மகிழ்ச்சியில் அடுத்த பந்தையும் சிக்ஸராக பறக்கவிடவேண்டும் என்ற முனைப்பில் முறுக்கினார். ஆனால் அந்த ஷாட் நேராகச் சென்று கோலியின் கைகளுக்கு கேட்சாகி, விக்கெட்டாக மாறியது.

உடனே பெங்களூரு அணியின் கேப்டன் கோலி, அஸ்வினைப் பார்த்து, ‘மன்கவுட் அவுட் பண்றவர்தானே நீங்க’ என்பது போல் ஆக்ரோஷமாக வைரல் ஆக்‌ஷன் ஒன்று கொடுத்தார். இதனால் உணர்ச்சிவசப்பட்ட அஸ்வின் டென்ஷனாகி கிளவுட்ஸை கழட்டி கிரவுண்டில் எறிந்துவிட்டுச் சென்றார். பின்னர் கோலி செய்தது சரியா என்பது பற்றி பேசியுள்ளார் அஸ்வின்.

அதன்படி, அஸ்வினுக்கும் கோலிக்கும் இடையில் நிகழ்ந்த இந்த சம்பவம் பெரும் விவாதப் பொருளாக மாறிவரும் நிலையில், ‘நானும்(அஸ்வின்) விராட் கோஹ்லியும் கிரிக்கெட்டை உள்ளார்ந்து விரும்பி உணர்வுபூர்வமாக விளையாடுபவர்கள் என்பதால் இப்படி நடப்பதை பெரிதாக்க வேண்டாம், இவை எங்களுக்குள் இயல்பான ஒன்றுதான்” என்று தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்