Video : "பாத்துட்டோம், 'vintage' யுவி'ய பாத்துட்டோம்..." 'ஆட்டம்' காட்டிய யுவராஜ் சிங்... கொண்டாடித் தீர்த்த 'ரசிகர்கள்'... வைரல் 'வீடியோ'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு டி 20 தொடர், ஆறு கிரிக்கெட் அணிகளின் முன்னாள் வீரர்களை வைத்து நடைபெற்று வருகிறது.

Video : "பாத்துட்டோம், 'vintage' யுவி'ய பாத்துட்டோம்..." 'ஆட்டம்' காட்டிய யுவராஜ் சிங்... கொண்டாடித் தீர்த்த 'ரசிகர்கள்'... வைரல் 'வீடியோ'!!

கடந்த ஆண்டு இந்த தொடர் நடைபெற்றிருந்த நிலையில், கொரோனா தொற்று காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதன் பிறகு, தற்போது மீண்டும் அதிலிருந்தே நடைபெற்று வரும் நிலையில், இந்த தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
vintage yuvraj singh turns back hits four sixes in an over

இதில், நேற்று நடைபெற்ற முதல் அரை இறுதி போட்டியில், இந்தியா லெஜண்ட்ஸ் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட்ஸ் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில், முதலில் பேட் செய்த இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில், 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 218 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக, சச்சின் டெண்டுல்கர் 65 ரன்களும், யுவராஜ் சிங் 49 ரன்களும் எடுத்தனர்.
vintage yuvraj singh turns back hits four sixes in an over

தொடர்ந்து, கடின இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, தொடக்கம் முதலே அதிரடியாக ஆடியது. கிட்டத்தட்ட, இலக்கை நெருங்கி வந்த வெஸ்ட் இண்டீஸ் அணியில், அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழ, இந்திய லெஜண்ட்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது.

இந்திய அணியின் வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி வரும் அதே வேளையில், வேறொரு விஷயத்தையும் வேற லெவலில் வரவேற்று வருகின்றனர். சர்வதேச டி 20 போட்டிகளில் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்த பெருமை உடைய யுவராஜ் சிங், இந்த போட்டியில், 19 ஆவது ஓவரில் 4 சிக்ஸர்களை அடித்து ரசிகர்களை குதூகலப்படுத்தினார்.

ஏற்கனவே, தென்னாப்பிரிக்க லெஜண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், இதே போல ஒரே ஓவரில் நான்கு சிக்ஸர்கள் அடித்து பட்டையை கிளப்பியிருந்தார்.



தற்போதும் அதே போல, அரை இறுதி போட்டியிலும், அவர் ஒரே ஓவரில் 4 சிக்ஸர்கள் அடித்துள்ளதால், 'Vinatge' யுவி திரும்ப வந்து விட்டதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்