"சச்சினுக்கு எல்லாம் தெரியும், ஆனா.." வறுமையில் வினோத் காம்ப்ளி.. மனம் உடைய வைக்கும் பின்னணி!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான வினோத் காம்ப்ளி தற்போது தெரிவித்துள்ள விஷயம், கிரிக்கெட் ரசிகர்கள் பலரையும் உருக வைத்துள்ளது.

"சச்சினுக்கு எல்லாம் தெரியும், ஆனா.." வறுமையில் வினோத் காம்ப்ளி.. மனம் உடைய வைக்கும் பின்னணி!!
Advertising
>
Advertising

இந்திய அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் கடவுள் என வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கரின் நெருங்கிய நண்பரும் ஆனவர் வினோத் காம்ப்ளி.

பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில், சச்சின் மற்றும் வினோத் காம்ப்ளி இணைந்து நிறைய சாதனைகளை படைத்துள்ளனர்.

சச்சின் மற்றும் வினோத் காம்ப்ளி ஆகிய இருவரும் அடுத்தடுத்து இந்திய அணியில் தேர்வாகி இருந்தனர். ஆரம்பத்தில், தனது சிறப்பான ஆட்டத்தால் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளால் வினோத் காம்ப்ளி கவனம் ஈர்த்திருந்தார். 104 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 17 டெஸ்ட் போட்டிகள் ஆடியுள்ள வினோத் காம்பிளியின் ஃபார்ம், திடீரென தலை கீழாக மாறியது.
Vinod kambli about his financial struggles want to work

இதனைத் தொடர்ந்து, கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வினை அறிவித்த வினோத் காம்ப்ளி, 2019 ஆம் ஆண்டு, மும்பையின் டி 20 லீக் தொடர் ஒன்றில், ஒரு அணிக்கு பயிற்சியாளராக இருந்தார். அதன் பின்னர், கொரோனா தொற்று காரணமாக, நிலைமை தலைகீழாக மாற, பொருளாதார ரீதியாக கடும் நெருக்கடிக்கும் வினோத் காம்பிளி தள்ளப்பட்டதாக செய்திகள் வெளியாகி இருந்தது.

இந்நிலையில், தனது குடும்ப சூழ்நிலை குறித்து, வினோத் காம்ப்ளி தற்போது மனம் திறந்துள்ளார். இது பற்றி பேசும் அவர், "நான் இப்போது ஒரு ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர். பிசிசிஐ மாதம் தரும் 30,000 ரூபாய் பென்சன் பணத்தை மட்டும் தான் நம்பி உள்ளேன். எனது ஒரே வருமானமும் இது தான். அதற்காக நான் பிசிசிஐ-க்கு நன்றி கடன்பட்டுள்ளேன். இந்த பென்சன் எனது குடும்பத்தை பார்த்துக் கொள்கிறது. ஆனால், எனக்கு இப்போது வேலை தேவைப்படுகிறது. இளைஞர்களுடன் இணைந்து பணிபுரிய ஆர்வமாகி உள்ளேன்.

இந்த விஷயத்தில் மும்பை அணி எனக்கு உதவ வேண்டும். எனக்கு மும்பை கிரிக்கெட் நிறைய கொடுத்திருக்கிறது. அதற்காக நான் எதையும் செய்ய தயாராக இருக்கிறேன். இதனால், மும்பை அணி எனக்கு ஒரு வாய்ப்பினை தர வேண்டும். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தவன் நான். கிரிக்கெட் தான் எனக்கு அனைத்தையும் கொடுத்தது" என வினோத் காம்ப்ளி உருக்கத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து, நண்பர் சச்சின் தனது வறுமை சூழ்நிலைக்கு உதவவில்லையா என்ற கேள்விக்கு பதிலளித்த வினோத் காம்ப்ளி, "அவருக்கு எல்லாம் தெரியும். ஆனால், நான் எதையுமே அவரிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. டெண்டுல்கர் மிடில்செக்ஸ் குளோபல் அகாடமியில் எனக்கு அவர் தான் வேலை பெற்று தந்தார். அது எனக்கு மகிழ்ச்சி தான். அவர் என்னுடைய சிறந்த நண்பர். அனைத்து காலங்களிலும் என்னுடன் இருந்துள்ளார்" என தெரிவித்துள்ளார்.

ஒரு காலத்தில், சிறந்த கிரிக்கெட் வீரராக விளங்கி வந்த வினோத் காம்ப்ளி, தற்போது வறுமையின் காரணமாக பிசிசிஐ பென்சன் பணத்தை மட்டும் நம்பி இருக்கும் சம்பவம், பலரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

SACHIN TENDULKAR, VINOD KAMBLI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்