‘வீசிய முதல் பந்திலேயே உலகசாதனை’.. மரண வெய்ட் காட்டிய விஜய் சங்கர்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலகக்கோப்பை தொடரில் தமிழக வீரரான விஜய் சங்கர் தான் வீசிய முதல் பந்திலேயே சாதனை படைத்து அசத்தியுள்ளார்.

உலகக்கோப்பை 22 -வது லீக் போட்டியில் இந்திய அணி 337 என்ற இமாலய இலக்கை பாகிஸ்தானுக்கு நிர்ணயித்துள்ளது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய ரோஹித் ஷர்மா 140 ரன்கள் எடுத்து அசத்தினார். அதேபோல் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி(77) மற்றும் கே.எல்.ராகுல்(57) அரைசதங்களை கடந்து அசத்தினர்.

இதனை அடுத்து 337 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது. இதில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான பும்ரா மற்றும் புவனேஷ்வர்குமார் ஆகியோரின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி ஆரம்பம் முதலே திணறியது.

இந்நிலையில் போட்டியின் 5 -வது ஓவரை புவனேஷ்குமார் வீசினார். அப்போது அந்த ஓவரின் 4 -வது பந்தை வீசும் போது புவனேஷ்வர்குமாருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் மீதமுள்ள இரண்டு பந்துகளை வீச விஜய் சங்கரை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அழைத்தார். இதனை அடுத்து விஜய் சங்கர் உலகக்கோப்பையில் தான் வீசிய முதல் பந்தில் பாகிஸ்தான் வீரர் இமாம் உல் ஹக்கை அவுட்டாக்கி சாதனை படைத்தார். இதனைத் தொடர்ந்து இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 166 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் அணி திணறி வருகிறது.

ICCWORLDCUP2019, VIRATKOHLI, VIJAYSHANKAR, INDVPAK, TEAMINDIA, INDVSPAK

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்