'டீம்ல நான் இல்லங்குறதயே'.. 'பிராக்டிகலா ஏத்துக்க முடியல'.. மனம் திறந்த இந்திய வீரர்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் வீரர் விஜய் சங்கர் டிஎன்பிஎல் போட்டிகளிலும் பிஸியாக இருந்து வருகிறார். இந்த தருணத்தில் இதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில் உலகக் கோப்பை போட்டி பற்றிய தனது சில அனுபவங்களை பகிர்ந்துள்ளார். 

முன்னதாக, இந்த உலகக் கோப்பை போட்டி தன் வாழ்வில் சிறந்ததொரு அனுபத்தைத் தந்ததாகவும், உலகக்கோப்பையில் விளையாட வேண்டும் என்று எல்லா வீரருக்கும் இருக்கும் அந்த கனவு தனக்கு நிறைவேறியதாகவும், அந்த அளவில் உலகக் கோப்பையின் ஓர் அங்கமாக, தானும் இருந்திருப்பதில் மகிழ்ச்சியும் தெரிவித்தார்.

உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியதை பிராக்டிகலாக எடுத்துக்கொண்டிருக்க வேண்டும், ஆனாலும், வருத்தமாக இருந்ததாகவும் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் இருந்ததாகவும் குறிப்பிட்ட விஜய் சங்கர், நியூஸிலாந்திடம் இந்தியா தோற்றதற்கு வருத்தம் தெரிவித்தார்.

இந்த நிலையில்,  இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றுள்ள விஜய் சங்கர், ஒரு வீரராக டி20, டெஸ்ட், ஒருநாள் என 3 ஃபார்மெட்டுகளிலும் விளையாடுவதற்கு தன்னைத் தயார் படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் உற்சாகத்துடன் அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார். 

ICCWORLDCUP2019, TEAMINDIA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்