”அவர CSK ஜெர்ஸியில பாக்கணும்…. இதே அதிரடி தொடரணும்”- RCB வீரருக்காக உருகிய விக்னேஷ் சிவன்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இயக்குனர் விக்னேஷ் சிவன் RCB வீரர் ஒருவரை சி எஸ் கே ஜெர்ஸியில் பார்க்க ஆவலாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | Laptop-ல் வேலை பார்த்துக் கொண்டிருந்த IT இளம்பெண்.. திடீரென கேட்ட அலறல் சத்தம்.. Work from home-ல் நடந்த அதிர்ச்சி..!

2 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் IPL…

கடந்த மார்ச் 26 ஆம் துவங்கிய ஐபிஎல் தொடர் பரபரப்பாக நடைபெற்றுவருகிறது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக மஹாராஷ்டிரா மாநிலத்தின் 4 மைதானங்களில் மட்டுமே நடப்பு ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. கிட்டத்தட்ட அனைத்து அணிகளும் குறைந்தது 6 போட்டிகளை விளையாடியுள்ள நிலையில் இனிமேல் வரும் போட்டிகள் ஒவ்வொன்றும் முக்கியமானதாக பார்க்கப்படுகின்றன.

கலக்கி வரும் பெங்களூர்…

திறமையான அணியாக இருந்தாலும் மோசமான தோல்விகளை சந்தித்து ரசிகர்களை ஏமாற்றும் அணிகளில் ஒன்றாக RCB இருந்தது. ஆனால் இந்த முறை விளையாடிய 7 போட்டிகளில் 5 போட்டிகளில் வென்று புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. பேட்டிங், பவுலிங், பீல்டிங் என ஆல்ரவுண்ட் பர்பாமன்ஸில் கலக்கி வருகிறது. அந்த அணிக்கு இந்த ஆண்டு முதல்முறையாக முன்னாள் சி எஸ்கே வீரர் டு பிளஸ்சி தலைமையேற்றுள்ளார்.

இந்த சீசனின் பினிஷர்…

குறிப்பாக பெங்களூர் அணியில் தினேஷ் கார்த்திக் இந்த ஆண்டு சிறப்பாக விளையாடி பினிஷ் செய்து வருகிறார். இதுவரை இந்த சீசனில் ஒரே ஒரு முறை மட்டுமே அவர் அவுட் ஆகியுள்ளார். 200 க்கும் மேல் ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். இரண்டு அரைசதங்கள் அடித்து இந்த சீசனின் சிறந்த பினிஷராக செயல்பட்டு வருகிறார். அதையடுத்து அவருக்கு பாராட்டுகள் குவிய “இந்தியாவுக்காக டி 20 உலகக்கோப்பையில் விளையாட என்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்துவருகிறேன்” எனக் கூறியுள்ளார்.

விக்னேஷ் சிவனின் ஆசை…

இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன், தினேஷ் கார்த்திக் குறித்து பகிர்ந்த பதிவு ஒன்று கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் “ தினேஷ் கார்த்திக்கை சி எஸ் கே ஜெர்ஸியில் பார்க்க ஆசைப்படுகிறேன். இந்திய அணியின் ஜெர்ஸியிலும்.  அவரின் இந்த அதிரடி இப்படியே தொடரட்டும்” எனக் கூறியுள்ளார். தமிழ்நாட்டு கிரிக்கெட்டரான தினேஷ் கார்த்திக் இதுவரை மும்பை, பெங்களூர், கொல்கத்தா உள்ளிட்ட அணிகளுக்காக ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | அடுத்தடுத்து தீப்பிடிக்கும் E-bike.. ‘அதை செக் பண்ணியே ஆகணும்’.. மத்திய அரசு எடுத்து அதிரடி முடிவு..!

CRICKET, DINESH KARTHIK, CSK, VIGNESH SHIVAN, CSK JERSEY, IPL 2022, RCB

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்