‘அவுட்’ கொடுத்தும் நகர மறுத்த பிரபல ‘இந்திய’ வீரர்... போட்டியின் இடையே ‘சர்ச்சையை’ ஏற்படுத்திய சம்பவம்...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுரஞ்சி டிராபி முதல் போட்டியில் நடந்த சம்பவம் ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வதோதரா ரிலையன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ரஞ்சி டிராபியின் முதல் போட்டியில் மும்பை அணி பரோடா அணியை 309 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. 534 என்ற இலக்குடன் விளையாடத் தொடங்கிய பரோடா அணி பரிதாபமாக 224 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைடைந்துள்ளது.
இந்தப் போட்டியின்போது பரோடா பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேற, நடுவர் அளித்த அவுட் தீர்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து யூசுப் பதான் அங்கிருந்து நகர மறுத்த சம்பவம் நடந்துள்ளது. போட்டியில் 2வது இன்னிங்சின் 48வது ஓவரை பவுலர் ஷஷாங்க் அத்தார்தே வீச, 2வது பந்தில் யூசுப் பதான் முன் காலை நகர்த்தி தடுப்பாட்டம் ஆடியுள்ளார். அப்போது பந்து பார்வர்ட் ஷாட்ர் லெக் ஃபீல்டரின் கைக்கு பிட்ச் ஆகாமல் சென்றுள்ளது.
இதைத்தொடந்து நடுவர் உடனடியாக கையை உயர்த்தாமல் சிறிது நேரம் கழித்து அவுட் கொடுக்க, யூசுப் பதான் பெவிலியன் திரும்ப மறுத்துள்ளார். நடுவரை நோக்கி இரண்டு கைகளையும் விரித்தபடி காட்டி இது என்ன அவுட்டா என அவர் செய்கை செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து நகர மறுத்த யூசுப் பதானை மும்பை வீரர் அஜிங்கிய ரஹானே சிறிது நேரம் சமாதானம் செய்ய, பின்னரே அவர் தலையை ஆட்டியபடி அங்கிருந்து சென்றுள்ளார். இது போன்ற சம்பவங்களால் தற்போது ரஞ்சி டிராபி போட்டிகளில் நடுவர்களின் தரம் குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- செம ஷாக்... 'வருஷம்' முழுக்க கூகுள்ல... 'அடுத்த' தோனியை... விழுந்து,விழுந்து 'தேடிய' இந்தியர்கள்!
- வெற்றியை தட்டிச்சென்ற 'தனி ஒருவன்'... பஞ்சாப்க்கு புது 'கேப்டன்' கெடைச்சுட்டாரு போல!
- 'சிறுத்தைய' விட செம பாஸ்ட்... டயர்டே ஆகாமல்... 'அடுத்த' தோனியை... வச்சு செய்யும் ரசிகர்கள்!
- ‘துணிச்சலுடன்’ மீட்க இறங்கியவரின் உடலை ‘சுற்றிய’ மலைப்பாம்பு... நொடியில் கிணற்றுக்குள் ‘தவறிவிழுந்த’ பயங்கரம்...
- விபத்தில் ‘இறந்துவிட்டார்’ என நினைத்தபோது... ‘காவலர்’ செய்த காரியத்தால் ‘நிமிடங்களில்’ நடந்த அதிசயம்.. வைரலாகப் பரவும் வீடியோ..
- ஒரே ‘செகண்ட்’ தான்... பாய்ந்துவந்து கையைக் ‘கவ்விய’ சிங்கம்... ‘பதறவைக்கும்’ வீடியோ...
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
- தெரிஞ்சு தான் 'இறக்கி' விட்டாரா?.. விட்டுக்கொடுத்த கோலி.. 'டக்-அவுட்' ஆகி வெளியேறிய வீரர்!
- மீண்டும் டீமில் 'இடம்பிடித்த' வீரர்.. நீங்க பேசாம 'பிளைட்' புடிச்சு வந்துருங்க.. வறுக்கும் நெட்டிசன்கள்!
- தோனி, கோலி, ரோஹித்தை 'ஓரங்கட்டிய' வீரர்.. 2019 முழுக்க இவரைத்தான்.. இந்தியர்கள் 'அதிகமா' தேடி இருக்காங்க!