'ஆஸ்திரேலிய வீரர்கள் கூட வரல'... 'ஆனா ஒரு நிமிஷம் கூட யோசிக்காமல்'... 'பேட்டை வீசிட்டு ஓடிச்சென்று'... 'இதயங்களை வென்ற இந்திய வீரர்!!!'...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நேற்றைய பயிற்சி ஆட்டத்தின்போது இந்திய வீரர் முகமது சிராஜ் செய்த ஒரு காரியத்தால் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இந்தியா ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையில் நடந்து வரும் டெஸ்ட் பயிற்சி ஆட்டத்தின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 194 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆக, இந்திய அணி பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது நடந்த சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணி வீரர் பும்ரா 40 ரன்கள் எடுத்து அதிரடியாக ஆடிக்கொண்டு இருந்தபோது கேமரூன் கிரீன் அவருக்கு பவுலிங் செய்தார்.

அப்போது பும்ரா பந்தை வேகமாக அடிக்க, அந்த பந்து கேமரூன் கிரீன் தலை மீது சென்று வேகமாக பட்டது. பல கிலோ மீட்டர் வேகத்தில் வந்த பந்து வேகமாக சென்று கேமரூன் கிரீன் தலையில் அடித்ததில் அவர் கலங்கி விழுந்து துடித்தார். இதன் காரணமாக ஆட்டத்தின் பாதியிலேயே கேமரூன் வெளியேற, அவருக்கு மாற்று வீரரும் அறிவிக்கப்பட்டார். இதற்கிடையே கேமரூன் கிரீன் கீழே விழுந்த போது நடுவர் கூட ஒரு நிமிடம் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்ப, ஆஸ்திரேலிய வீரர்கள் உதவ வரும் முன்னரே இந்திய வீரர் முகமது சிராஜ் ஓடிச்சென்று உதவியுள்ளார். 

கேமரூன் கிரீனுக்கு அடிப்பட்டபோது ரன்னர் எண்டில் இருந்த முகமது சிராஜ் அதைப் பார்த்ததும் ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் வேகமாக தன் பேட்டை தூக்கி எறிந்துவிட்டு ஓடிச்சென்று கேமரூன் கிரீனை தாங்கி பிடித்தார். அதோடு அவருடைய தலையை பிடித்துக் கொண்டு அவருக்கு உதவியாக நின்றார். இப்படி எதிரணி வீரருக்காக பதறிப்போய் சிராஜ் செய்த இந்த காரியம் தற்போது வைரலாகி பாராட்டுகளை குவித்து வருகிறது.

 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்