VIDEO: வாவ்..! யாருப்பா இந்த பையன்..? சச்சினை வியக்க வைத்த ‘சுட்டி’ பையனின் பவுலிங்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் ட்விட்டரில் பதிவிட்ட வீடியோ இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் (Sachin Tendulkar) தனது ட்விட்டர் பக்கத்தில் சிறுவன் ஒருவன் அற்புதமாக பவுலிங் செய்த வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். சிறு வயதிலேயே மிகவும் நேர்த்தியாக பந்து வீசும் அந்த சிறுவனின் வீடியோ இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. இந்த வீடியோவை தனது நண்பர் ஒருவர் அனுப்பியதாக சச்சின் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோ பார்த்த ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ, ஆஃப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் ஆகியோர் சிறுவனின் பவுலிங் திறமையை பாராட்டியுள்ளனர்.

மேலும் மும்பை இந்தியன்ஸ் அணியும் சிறுவனுக்கு வாழ்த்து தெரித்துள்ளது. அதேபோல் பாலிவுட் முன்னணி நடிகர் ரன்வீர் சிங்கும் சிறுவனை பாராட்டியுள்ளார். இந்த நிலையில் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்