VIDEO: அவுட்டுன்னு நெனச்சு அம்பயரே கையை தூக்கிட்டாரு.. ஆனா கடைசியில் நடந்த ‘ட்விஸ்ட்’.. செம ‘கடுப்பான’ பவுலர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணியின் விக்கெட் கீப்பர் குசல் பெரேரா தவறவிட்ட கேட்ச் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

டி20 உலகக்கோப்பை தொடரின் 22-வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவும், இலங்கையும் மோதின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 154 ரன்களை எடுத்தது.

இதில் அதிகபட்சமாக குசல் பேரேரா மற்றும் அசலங்கா ஆகியோர் தலா 35 ரன்களும், பனுகா ராஜபக்சே 33 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரை மிட்சல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் மற்றும் ஆடம் ஜாம்பா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

இதனை அடுத்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, 17 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. இதனால் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 65 ரன்களும், ஆரோன் பிஞ்ச் 37 ரன்களும் எடுத்தனர்.

இந்த நிலையில், இப்போட்டியில் இலங்கை அணியின் விக்கெட் கீப்பர் குசல் பெரேரா (Kusal Perera) தவறவிட்ட கேட்ச் வீடியோ இணையத்தில் வைராலாகி வருகிறது. அதில், ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் (David Warner), களமிறங்கியது முதல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். இதனால் இவரது விக்கெட்டை எடுக்க இலங்கை அணி பல முயற்சிகளை மேற்கொண்டது.

அப்போது இலங்கை வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீரா (Dushmantha Chameera) வீசிய 5-வது ஓவரின் 4-வது பந்தை எதிர்கொண்ட வார்னரின் பேட் நுனியில் பந்து பட்டு கேட்சானது. ஆனால் நேராக கைக்கு வந்த கேட்ச்சை விக்கெட் கீப்பர் குசல் பெரேரா தவறவிட்டார். இதனால் டேவிட் வார்னர் அவுட்டில் தப்பினார்.

கைக்கு வந்த கேட்ச் என்பதால் குசல் பெரேரா பிடித்து விடுவார் என அம்பயரும் அவுட் கொடுக்க கையை தூக்கிவிட்டார். ஆனால் எதிர்பாராதவிதமாக அவர் தவறவிட்டதால், பந்துவீச்சாளர்  துஷ்மந்த சமீரா கடும் கோபமடைந்தார். ஈசியான கேட்சை தவறவிட்டதால், ரசிகர்கள் பலரும் குசல் பெரேராவை இணையத்தில் விமர்சனம் செய்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்