"இதுக்குபோய் எப்படி Out குடுக்கலாம்???... அதுலதான் அவங்க தடுமாறிட்டாங்க"... 'வெடித்த அடுத்த பெரும் சர்ச்சையால் ரசிகர்கள் கொந்தளிப்பு!'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஎலிமினேட்டர் போட்டியில் ஹைதராபாத் அணியின் டேவிட் வார்னருக்கு கொடுக்கப்பட்ட அவுட் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அபுதாபியில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் வென்றால் மட்டுமே இறுதிப் போட்டிக்கான இரண்டாம் தகுதிச் சுற்றுப் போட்டிக்கு முன்னேற முடியும் என்ற நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் நேற்று மோதின. முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் மட்டுமே எடுக்க, அந்த அணியில் ஏபி டிவில்லியர்ஸ் மட்டுமே அதிரடி ஆட்டம் ஆடி 56 ரன்கள் குவித்தார்.
இதையடுத்து 132 ரன்கள் என இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு டேவிட் வார்னர், ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி துவக்கம் அளித்தனர். கோஸ்வாமி டக் அவுட் ஆக, முக்கியமான போட்டி என்பதால் டேவிட் வார்னர் நிதானமாக ஆடி வந்தார். அப்போது அவர் ஆறாவது ஓவரில் சர்ச்சைக்குரிய முறையில் ஆட்டமிழந்தார். ஆறாவது ஓவரை முகமது சிராஜ் வீச, அந்த ஓவரின் நான்காவது பந்தை சந்தித்த வார்னர் பந்தை அடிக்க முடியாமல் தன் பேட்டுக்கும், உடலுக்கும் நடுவே பந்தை தவறவிட்டார்.
பின்னர் அது கேட்ச் என பெங்களூர் வீரர்கள் அம்பயரிடம் அவுட் கேட்க, களத்தில் இருந்த அம்பயர் அவுட் தர மறுத்து விட்டார். இதையடுத்து விராட் கோலி டிஆர்எஸ் கேட்க, மூன்றாவது அம்பயரால் பந்து கிளவுஸ் அல்லது பேட்டில் படுவதை உறுதி செய்ய முடியவில்லை. ஸ்னிக்கோ மீட்டரில் கூட பந்து எங்கே படுகிறது என தெரியவில்லை. இந்நிலையில் அவுட் கொடுத்திருக்கக் கூடாது எனும்போதும் மூன்றாவது அம்பயர் அவுட் கொடுத்துள்ளார். இந்த அவுட் முடிவே தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த முடிவால் போட்டியில் ஹைதராபாத் அணி அதன் பின் தடுமாறத் துவங்கியது. அதனால் அம்பயர் முடிவால் தான் ஹைதராபாத் அணி இந்த நிலையை எட்டியது என ரசிகர்கள் சரமாரியாக விளாசினர். இருப்பினும் போட்டியில் அடுத்துவந்த கேன் வில்லியம்சன் அபார ஆட்டம் ஆடி 50 ரன்கள் குவித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். முடிவில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றதால் அந்த சர்ச்சை சற்று தணிந்துள்ளது போதும், இந்த அவுட் முடிவு ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘இந்த ஐபிஎல் அணி தான் CUP வெல்லும்!’.. ‘காரணம்.. இவர் இல்ல.. இவர் Talent இல்ல.. எல்லாம் Toss-தான்’!.. ’Dream11-க்கு பின்னால ‘இப்படி ஒரு விஷயம் இருக்கா?’
- 'நாங்களும் குடும்பத்த பார்க்க வேண்டாமா!?... என்னங்க நீங்க இப்படி பண்றீங்க?'.. 'ரொம்ப மன உளைச்சலா இருக்கு!'.. விராட் வேதனை!
- 'இப்போ இதெல்லாம் தேவையா???'... 'வாழ்த்து சொல்லி கோலியை சீண்டிய இங்கிலாந்து'... 'கொந்தளித்துபோன ரசிகர்கள் கொடுத்த பதிலடி!!!'...
- ‘மோசமான சாதனையால் சோதனை’...!!! ‘தானாகவே வந்து வசமாக சிக்கிய வீரர்’...!!! ‘கட்டம் கட்ட காத்திருக்கும் பிசிசிஐ’...!!! 'இந்த நேரத்தில் இது தேவையா???
- 'சல்லி... சல்லியா... நொறுக்கிட்டாங்களே!'... 'நம்பி எறக்கிவிட்டதுக்கு... உங்களால என்ன பண்ண முடியுமோ... அத பண்ணீட்டீங்க!'.. தரமான சம்பவத்தால்... மனமுடைந்த பாண்டிங்!
- 'பழைய தோனியே இப்போ இருக்க தோனிய பாத்தா'... 'இததான் சொல்லிருப்பாரு?!!'... 'கண்டிப்பா அப்படி நடக்கும்'... 'அடித்து சொல்லும் பிரபல வீரர்!!!'...
- 'பவுலிங்'னா இப்படி இருக்கணும்... டபுள் விக்கெட் மெய்டன்!.. 'சும்மா... காட்டு காட்டுனு காட்டிட்டாரு!'.. பும்ராவின் மேஜிக் ஃபார்முலா 'இது' தான்!
- 'எத்தன தடவ?!!'... 'விட்டு விட்டு பிடித்த 'செம்ம' கேட்ச்சால்'... 'சீரியஸான போட்டியில் சிரிப்பு காட்டிய மும்பை வீரர்!!!'...
- 'ஐபிஎல் தொடர் வரலாற்றில்'... 'மிக மோசமான சாதனை படைத்த'... 'டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி'... 'மனமுடைந்த ரிக்கி பாண்டிங்'!
- 'நடப்பு சீசனில் மாஸ் காட்டிய இளம் வீரர்கள்!!!'... 'கங்குலி பாராட்டிய லிஸ்ட்டில்'... 'மிஸ்ஸான 2 முக்கிய பிளேயர்ஸ்?!!'...