VIDEO: ஓ அப்டியா..! பவுலிங் செய்தபோது ஸ்காட்லாந்து பேட்ஸ்மேனை நேக்கா ‘ஏமாற்றிய’ அஸ்வின்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் பவுலிங் செய்வதுபோல் வந்து ஏமாற்றிய அஸ்வினின் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

Advertising
>
Advertising

டி20 உலகக்கோப்பை தொடரின் 37-வது லீக் போட்டி நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணியும், ஸ்காட்லாந்து அணியும் மோதின. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி, 17.4 ஓவர்களில் 85 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் அதிகபட்சமாக ஜார்ஜ் முன்சி 24 ரன்களும் எடுத்தார்.

இதனை அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி, 6.3 ஓவர்களில் 89 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 50 ரன்களும், ரோஹித் ஷர்மா 30 ரன்களும் எடுத்தனர். ஆல்ரவுண்டர் ஜடேஜாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்த நிலையில், இப்போட்டியின் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் பவுலிங் செய்வதுபோல் வந்து ஏமாற்றிய வீடியோவை ஐசிசி தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில், ‘போட்டியின் 4-வது ஓவரை அஸ்வின் வீசினார். அந்த ஓவரின் 5-வது பந்தை வீசுவதற்காக அஸ்வின் ஓடி வந்தார்.

அப்போது ஸ்காட்லாந்து வீரர் ஜார்ஜ் முன்சி வேகமாக ரிவெர்ஸ் ஸ்வீப் ஷாட் அடிக்க ஆயத்தமானார். இதனால் பந்துவீசுவதுபோல் வந்து வீசாமல் அப்படியே அஸ்வின் திரும்பி சென்றார். அதற்கு காரணம் முந்தைய பந்தில்தான், ஜார்ஜ் முன்சி பவுண்டரி விளாசியிருந்தார். அதனால் மீண்டும் அவர் அதேபோல் அடிக்க முயன்றதால் அஸ்வின் பந்து வீசாமல் சென்றார். ஆனாலும் அடுத்த இரண்டு பந்துகளில் தொடர்ந்து இரண்டு பவுண்டரிகளை ஜார்ஜ் முன்சி விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

RAVICHANDRAN ASHWIN, INDVSCO, T20WORLDCUP

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்