‘இதெல்லாம் உங்களத்தவிர வேற ‘யாரால்’ செய்ய முடியும்..?’- சபாஷ் போடும் பாகிஸ்தான் முன்னாள் வீரர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் டி20 தொடரின் வெற்றிக் கோப்பை இந்தியாவுக்குத் தான் என்பது உறுதி ஆனாலும் இன்று 3-வது டி20 போட்டியில் இரு அணிகளும் மோதுகின்றன. இந்த சூழலில் இந்திய அணியை பாராட்டி பேசியுள்ளார் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட்கீப்பரும் பேட்ஸ்மேனும் ஆன கம்ரான் அக்மல்.

Advertising
>
Advertising

“பெரிய நட்சத்திர வீரர்கள் நிறைந்த படை இல்லை என்றாலும் இளம் வீரர்களுடனேயே நியூசிலாந்து அணிக்கு எதிராக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பைக்குப் பின்னர் இந்த அளவிலான வெற்றியை வேற எந்த அணியாலும் பெற முடியாது. டி20 தொடரில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தது” எனக் கூறியுள்ளார் கம்ரான் அக்மல்.

மேலும் அவர் கூறுகையில், “புது வீரர்களுடன் இது மிகப்பெரிய வெற்றி என்றே சொல்ல வேண்டும். இந்தியாவில் திறமையாளர்கள் நிறைய இருக்கிறார்கள், அவர்களுக்கு ஏற்ற வாய்ப்பும் அங்கு கொடுக்கப்படுகிறது. அடுத்ததாக தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு ஏதுவாக இந்திய அணி தனது வீரர்களை மிகவும் அருமையாக ஒருங்கிணைத்துள்ளது.

முக்கிய வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு இளம் வீரர்களை நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இறக்கியது நல்ல யோசனை. இது அணியின் வேலைப்பளுவை மிச்சப்படுத்தும். ரோகித்தின் பேட்டிங் போலவே அவர் தலைமையிலான அணியும் அதிரடி ஆக உள்ளது. டி20 உலகக்கோப்பை பைனலிஸ்ட் ஆக இருந்த நியூசிலாந்து அணியை இளம் வீரர்களுடன் வீழ்த்தியதை பாராட்டத்தான் வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.

மூத்த முன்னணி வீரர்களான விராட் கோலி, ஜஸ்ப்ரிட் பும்ரா, ரவிந்திர ஜடேஜா ஆகியோருக்கு தற்போது ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டிகள் மூலம் கண்டெடுக்கப்பட்ட இளம் வீரர்களான வெங்கடேஷ் ஐயர், ஹர்ஷல் படேல், ருதுராஜ் கெய்க்வாட், ஆவேஷ் கான் ஆகியோர் களம் இறக்கப்பட்டு உள்ளனர். நியூசிலாந்து உடன் இன்னும் 2 போட்டிகள் கொண்ட ஒரு டெஸ்ட் தொடரை இந்தியா விளையாட உள்ளது. அதன் பின்னர் தென் ஆப்பிரிக்காவில் அந்நாட்டு அணியை டி20, ஒரு நாள், டெஸ்ட் ஆகிய போன்று வடிவங்களிலும் எதிர்கொள்கிறது இந்திய அணி.

CRICKET, ROHIT SHARMA, TEAM INDIA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்