"ஐபிஎல் கப்போட வாங்க தம்பி.." இந்திய வீரருக்கு ஸ்பெஷல் வாழ்த்து சொன்ன 'WWE' நட்சத்திரம்.. பின்னணி என்ன??

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

15 ஆவது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் தற்போது மோதி வருகின்றன.

Advertising
>
Advertising

மதுரையில் பரதநாட்டியம் ஆடும்போதே மரணம் அடைந்த கலைஞர்.. மேடையிலேயே பிரிந்த உயிர்..!

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில், சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதியிருந்த நிலையில், கொல்கத்தாவை வீழ்த்தி, சென்னை அணி நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றி இருந்தது.

பேட்டிங் செய்து வரும் 'சிஎஸ்கே'

தொடர்ந்து, தற்போதைய ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் மோதி வருகின்றன. சென்னை அணியின் புதிய கேப்டனாக ஜடேஜாவும், கொல்கத்தா அணியின் புதிய கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில், டாஸ் வென்ற ஷ்ரேயாஸ் ஐயர், பீல்டிங்கைத் தேர்வு செய்தார். அதன்படி, சிஎஸ்கே அணியும் தற்போது பேட்டிங் செய்து வருகிறது.

இந்திய வீரருக்கு 'WWE' ஸ்டார் வாழ்த்து

முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதம் ஐபிஎல் ஏலம் முடிந்து, பல வீரர்கள் புதிய அணிகளில் இணைந்துள்ளதால், இந்த முறை ஐபிஎல் தொடர் எப்படி இருக்கும் என்பதை பார்க்கவும் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இந்நிலையில், கொல்கத்தா அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரர் ஒருவருக்கு WWE ஸ்டார் செத் ரோலின்ஸ் சர்ப்ரைஸாக வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

தீவிர ரசிகன்

கடந்த சீசனில், கொல்கத்தா அணிக்காக களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர், தன்னுடைய சிறப்பான ஆட்டத்தின் மூலம், இந்திய அணியிலும் இடம்பிடித்திருந்தார். அது மட்டுமில்லாமல், இந்த சீசனுக்காக கொல்கத்தா அணியும் அவரைத் தக்க வைத்துக் கொண்டது. இதனிடையே, தனக்கு 'WWE' மிகவும் பிடிக்கும் என்றும், தான் செத் ரோலின்ஸ்ஸின் தீவிர ரசிகன் என்றும் வெங்கடேஷ் ஐயர் குறிப்பிட்டிருந்தார்.

கப் ஜெயிச்சு வாங்க

இதனையடுத்து, தற்போது வெங்கடேஷ் ஐயருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள செத் ரோலின்ஸ், "வெங்கடேஷ் மை மேன்.. நீங்கள் என் தீவிர ரசிகன் என்பது எனக்கு தெரிய வந்தது. இப்போது உங்கள் முன் ஐபிஎல் தொடர் உள்ளது. என்னுடைய ஆசீர்வாதமும் ஊக்குவிப்பும் எப்போதும் உங்களுடன் உள்ளது. சென்று கோப்பையை கைப்பற்றி வாருங்கள்" எனக்கூறி வீடியோ ஒன்றில் பேசியுள்ளார்.

WWE நட்சத்திரம் ஒருவர், இளம் இந்திய கிரிக்கெட் வீரருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள வீடியோ, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. அதே போல, ஆல் ரவுண்டரான வெங்கடேஷ் ஐயர், இந்த ஐபிஎல் தொடரில் கலக்கினால், நிச்சயம் டி 20 உலக கோப்பையின் இந்திய அணியில் இணைவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
 

 

"உன்னோட 20 நிமிஷம் கூட வாழ முடியாது.." வீட்டுல 'Hidden கேமரா'.. கணவனின் டார்ச்சர்.. பெண்ணின் பரபரப்பு முடிவு

CRICKET, IPL, VENKATESH IYER, WWE STAR, WWE STAR SETH ROLLINS, ஐபிஎல், சிஎஸ்கே

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்