நடுமைதானத்தில் ரஜினி ஸ்டைலில் கெத்தா… மாஸா… கொண்டாட்டத்தில் ஈடுபட்ட வெங்கடேஷ் ஐயர்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடர் மூலம் பல்வேறு வீரர்களின் திறமைகளை உலகம் அறிய நேர்ந்தது. அந்த வகையில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரின் மூலம் உலகம் அறிந்த வீரர் தான் வெங்கடேஷ் ஐயர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக அவர் விளையாடி வருகிறார். குறிப்பாக இந்த சீசனில் பல போட்டிகளை தன்னந்தனி ஆளாக நின்று தன் அணிக்கு வெற்றியைத் தேடித் தந்துள்ளார் வெங்கடேஷ்.

Advertising
>
Advertising

இதைத் தொடர்ந்து அவர் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரிலும் இந்திய அணியில் இடம் பெற்றார். அடுத்தடுத்து இந்திய அணிக்காக அவர் தொடர்ந்து களம் காணுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது பிசிசிஐ தரப்பு, விஜய் ஹசாரே தொடரை நடத்தி வருகிறது. அதில் மத்திய பிரதேசம் சண்டிகர் அணிகளுக்கு இடையில் நேற்று போட்டி நடந்தது. இந்தப் போட்டியில் மத்திய பிரதேச அணிக்காக விளையாடிய வெங்கடேஷ் ஃபுல் ஃபார்மில் இருந்தார். அவர், சண்டிகர் அணியின் பவுலர்களின் பந்து வீச்சை நாலா புறமும் சிதறித்து சதம் விளாசி அசத்தினார்.

மொத்தமாக 113 பந்துகள் விளையாடி வெங்கடேஷ், 151 ரன்கள் குவித்து அதிரடி காண்பித்தார். இதன் மூலம் மத்திய பிரதேச அணி, 50 ஓவர்களுக்கு 9 விக்கெட் இழப்புக்கு 331 ரன்கள் குவித்தது. இந்தப் போட்டியில் வெங்கடேஷின் ஸ்டிரைக் ரேட், 133.63 ஆகும். தனது இன்னிங்ஸில் மொத்தமாக 8 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்கள் விளாசி அசத்தினார் வெங்கடேஷ்.

அவர் இப்படி சதம் விளாசி அதிரடி காண்பித்ததை விட, அனைவரையும் கவனிக்க வைத்தது வேறொரு விஷயம். சதம் அடித்தப் பின்னர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஸ்டைலில் அதை கொண்டாடினார் வெங்கடேஷ். நேற்று ரஜினிக்கு 71 வது பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ரஜினியின் ரசிகரான வெங்கடேஷ், தனது சதத்தை அவருக்கு உரித்தாக்கி உள்ளார். இது சம்பந்தமான வீடியோவை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் அதே வீடியோவை தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்தது. இதைத் தொடர்ந்து பலரும் இந்த வீடியோவை டிரெண்டாக்கி வருகின்றனர்.

இதுவரை விஜய் ஹசாரே தொடரில் இரண்டு சதங்களை விளாசியுள்ளார் வெங்கடேஷ். முன்னதாக கேரள அணிக்கு எதிரான போட்டியில் 84 பந்துகளில் 112 ரன்கள் குவித்தார். அதேபோல உத்தரகாண்ட் அணிக்கு எதிரான போட்டியில் வெங்கடேஷ், 49 பந்துகளில் 71 ரன்கள் அடித்தார். இதுவரை அவர் தொடரில் மொத்தமாக 348 ரன்கள் குவித்து கலக்கி வருகிறார்.

CRICKET, VIJAY HAZARE TROPHY, VENKATESH IYER, RAJINIKANTH, ரஜினிகாந்த், வெங்கடேஷ் ஐயர்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்