‘பாதி கெய்ல்.. பாதி கோலி’! இவர்தான் கிரேட் டி20 கிரிக்கெட் ப்ளேயர்.. சிஎஸ்கே வீரரை தாறுமாறாக புகழ்ந்த மைக்கேல் வாகன்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் சிஎஸ்கே வீரரை ஒருவரை புகழ்ந்து பேசியுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் ஆல்ரவுண்டரான ஜடேஜா (Jadeja), நடப்பு ஐபிஎல் (IPL) தொடரில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என மூன்று வகையிலும் சிறப்பான பங்களிப்பை கொடுத்து வருகிறார். பல போட்டிகளில் சிஎஸ்கே அணி வெற்றி பெற ஜடேஜா முக்கிய காரணமாக இருந்துள்ளார்.

அதற்கு உதாரணமாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிக்கு எதிரான போட்டி ஒன்றில், ஹர்ஷல் படேல் (Harshal Patel) வீசிய கடைசி ஓவரில் 37 ரன்கள் அடித்து ஆட்டத்தையே மாற்றினார். அதனால் அப்போட்டியில் சிஎஸ்கே அணி அபார வெற்றி பெற்றது. அதேபோல் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட ஐபிஎல் தொடரிலும் ஜடேஜா சிறப்பாக விளையாடி வருகிறார்.

இந்த நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் (Michael Vaughan), ஜடேஜாவை புகழ்ந்து பேசியுள்ளார். அதில், ‘சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜா சிறப்பாக விளையாடி வருகிறார். என்னை கேட்டால், டி20 கிரிக்கெட்டில் அவரைதான் சிறந்த வீரர் என்று கூறுவேன். பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் 100 சதவீதத்தை வெளிப்படுத்தி வருகிறார். சிஎஸ்கே ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியதற்கு ஜடேஜாவும் ஒரு முக்கிய காரணம்’  என மைக்கேல் வாகன் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘ஏன் நான் ஜடேஜாவை இவ்வளவு புகழ்ந்து பேசுகிறேன் என்றால், அவரது பேட்டிங் தற்போது அற்புதமாக உள்ளது. அவரிடம் கிறிஸ் கெயிலிடம் இருக்கும் பவரும், விராட் கோலியிடம் இருக்கும் திறனும் உள்ளது. அதனால் தான் ஐபிஎல் தொடரில் அவரால் எளிதாக பவுலிங் செய்ய முடிகிறது. 15 பந்துகள் பேட்டிங் செய்தாலே அதிக ரன்களை குவித்து விடுகிறார். ஆட்டத்தில் கடைசி கட்டத்தில் களமிறங்கி சரமாரியாக விளாசுகிறார்’ என மைக்கேல் வாகன், ஜடேஜாவை புகழ்ந்து பேசியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்