“ஆமா, நான் தளபதி ரசிகன் தான்... அவரோட படங்கள் எல்லாம் FDFS பாத்துருவேன்...!!!" - திடீரென Twitter-ல் டிரெண்டாகும் வருண் சக்ரவர்த்தியின் 'டாட்டூ'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி ஐபிஎல் தொடரில் ஆடி வருகிறார். சுழற்பந்து வீச்சாளரான வருண், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோனியின் விக்கெட்டை எடுத்து கவனம் ஈர்த்த நிலையில் தொடர்ந்து கொல்கத்தா அணிக்காக சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், வருண் சக்ரவர்த்தி உள்ளிட்ட சில கொல்கத்தா அணி வீரர்களின் புகைப்படத்தை கொல்கத்தா அணி தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தது. அதில் வருணின் இடது கையில் நடிகர் விஜய்யின் 'தலைவா' படத்தின் டாட்டூ ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த புகைப்படத்தினை தற்போது விஜய்யின் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர். 

 

 




இதனால் #VarunChakravarthy என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் தற்போது ட்ரெண்டாகி வருகிறது. ஒரு இளம் கிரிக்கெட் வீரரின் ஒரே ஒரு புகைப்படம் வெளியானதில் அவர் விஜய் ரசிகர் என தெரிந்ததால் அதனை தளபதி ரசிகர்கள் வேற லெவலில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.  


 

 



 

முன்னதாக, வருண் சக்ரவர்த்தி தான் ஒரு மிகப்பெரிய விஜய் ரசிகர் என தெரிவித்திருந்த நிலையில், அவரின் அனைத்து படங்களையும் முதல் நாளே பார்த்து விடுவேன் எனவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்