"விராட் கோலிக்கே அதான் நிலைமை".. தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி சொன்ன முக்கிய தகவல்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடரில் ஜொலித்ததன் மூலம், இந்திய அணிக்காக ஆடும் வாய்ப்பை பெற்றவர் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி.

"விராட் கோலிக்கே அதான் நிலைமை".. தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி சொன்ன முக்கிய தகவல்!!
Advertising
>
Advertising

Also Read | "அதிர்ஷ்டமே மீன் வலைக்குள்ள வந்து சிக்கி இருக்கு".. மொத்தம் 35 கிலோ.. "மதிப்பே 35 கோடிக்கு மேல போகுமாம்"

கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக களமிறங்கி இருந்த சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி, தனது அசாத்திய திறனை வெளிப்படுத்தி இந்திய அணிக்காக ஆடும் வாய்ப்பையும் பெற்றிருந்தார்.

தொடர்ந்து, கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்றிருந்த டி 20 உலக கோப்பைக்கான இந்திய அணியிலும் வருண் இடம் பிடித்திருந்தார்.

Varun chakravarthy about his comeback to indian cricket team

ஆனால், மூன்று போட்டிகள் களமிறங்கி இருந்த வருண், அதில் ஒரு விக்கெட்டை மட்டுமே கைப்பற்றி இருந்தார். இந்திய அணியும் லீக் சுற்றுடன் வெளியேறி இருந்தது. இதற்கு அடுத்து இந்திய அணியில் பெரிய அளவில் வருணுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது. தொடர்ந்து, இந்தாண்டு ஐபிஎல் போட்டியிலும் பெரிய அளவிலான தாக்கத்தை வருண் ஏற்படுத்தவில்லை.

இந்நிலையில், தற்போது மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிப்பது தொடர்பாக சில விஷயங்களை வருண் சக்கரவர்த்தி பகிர்ந்து கொண்டுள்ளார். இது தொடர்பாக பேசிய வருண், "அனைவரும் எனது செயல்பாடுகள் பற்றி கேள்வி எழுப்பினர். ஆனால் அதை பற்றி எனக்கு கவலை இல்லை. இங்கு அனைத்து வீரர்களை சுற்றி கேள்விகள் எழுப்பப்பட தான் செய்கிறது. விராட் கோலியை பற்றி கூட கேள்விகள் எழ தான் செய்தது.

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் ஒருவர் ஆடவில்லை என்றால், இது போன்ற விமர்சனங்கள் உருவாகும். அது தான் விளையாட்டுடைய நியதி. நாளுக்கு நாள் நான் என்னை சிறந்த வீரராக தயார்படுத்த வேண்டியது தான் எனது வேலை. நான் பந்து வீசும் போது மெதுவாக ஓடி வருவது ஒரு பிரச்சனை என்பதை நான் அறிந்து கொண்டேன். ஆரம்பத்தில் இதனை அறியாத நான், எனக்கு கிடைத்த பிரேக்கில் தெரிந்து கொண்டேன். தற்போது இதனை சரி செய்து வருவதால் நல்ல பலனும் கிடைத்து வருகிறது" என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து, அடுத்து வரும் உள்ளூர் தொடர் மற்றும் ஐபிஎல் தொடர்களில் சிறப்பாக பந்து வீசி, மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிப்பேன் என்றும் நம்பிக்கையுடன் வருண் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.

Also Read | "21 லட்சம் மோசடி பத்தி தான் முதல்'ல விசாரிச்சுருக்காங்க.. ஆனா, அதுக்கப்புறமா தான்".. தோண்ட தோண்ட வந்த திடுக்கிடும் தகவல்!!

CRICKET, VARUN CHAKRAVARTHY, COMEBACK, INDIAN CRICKET TEAM, VIRAT KOHLI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்