போட்டிக்கு நடுவே நடந்த தில்லு முல்லு.. சர்ச்சையில் சிக்கிய ரிஷப் பண்ட்??.. என்ன சிம்ரன் இதெல்லாம்?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதென்னாப்பிரிக்கா : இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், தென்னாப்பிரிக்க வீரரின் விக்கெட் ஒன்று, அதிகம் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே, தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில், இந்திய அணி 202 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கே எல் ராகுல் 50 ரன்களும், அஸ்வின் 46 ரன்களும் எடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து, தென்னாப்பிரிக்க அணி தங்களது முதல் இன்னிங்ஸில் 229 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணி தரப்பில், வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்கூர் 7 விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைத்திருந்தார்.
கிளப்பிய சர்ச்சை
பின்னர், இந்திய அணி தங்களது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 85 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 35 ரன்களுடனும், ரஹானே 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 58 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி உள்ளது. அது மட்டுமில்லாமல், இன்னும் 3 நாட்கள் இருப்பதால், நிச்சயம் இந்த போட்டியில் முடிவு கிடைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, தென்னாப்பிரிக்க வீரர் ஒருவரின் விக்கெட், சர்ச்சையை கிளப்பியுள்ளது.
நடையைக் கட்டிய வீரர்
மதிய உணவு இடைவேளைக்கு முன்பாக, கடைசி ஓவரில், தென்னாப்பிரிக்க வீரர் வெண்டர் டுசன், ஷர்துல் தாக்கூர் பந்து வீச்சில், ரிஷப் பண்ட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். உடனடியாக, பண்ட் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் அவுட்டிற்கு அப்பீல் செய்ய, நடுவரும் அவுட் என அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, வெண்டர் டுசன் அங்கிருந்து நடையைக் கட்டினார்.
விரைவில் பேரிடர் காலம் முடிவுக்கு வருகிறது.. ஒமைக்ரான் குறித்து விஞ்ஞானிகள் முழு விளக்கம்
ரிஷப் பண்ட் மீது கண்டனம்
இந்நிலையில், அவர் அவுட் ஆனது ரீப்ளேயில் இல்லை என்பது போல தெரிந்தது. அதாவது, பண்ட் கைக்கு பந்து செல்வதற்கு முன்னர், கீழே பட்டு, பவுன்ஸ் ஆகி, பிறகு கேட்ச் ஆனது போல இருந்தது. அவுட்டில்லை என்ற போதும், அவுட்டிற்காக அப்பீல் செய்ததால், ரிஷப் பண்ட் மீது அதிக கண்டனங்கள் எழுந்தது. அந்த சமயத்தில், வர்ணனை செய்து கொண்டிருந்த இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், வெண்டர் டுசன், ரிவியூ கேட்காமல் சென்றது அவரின் தவறு தான் என்று குறிப்பிட்டார்.
புகாரளித்த கேப்டன்
இந்திய அணியின் பக்கம் தவறு இருந்ததால், வெண்டர் டுசன் மீண்டும் களமிறங்க வாய்ப்பு கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நீண்ட நேரமாகியும் அப்பீல் செய்யாத காரணத்தினால், அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனிடடையே, மத்திய உணவு இடைவேளையின் போது, தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டீன் எல்கர் மற்றும் அந்த அணியின் நிர்வாகத்தினர் சிலர், போட்டி நடுவர் மற்றும் மூன்றாம் நடுவர் ஆகியோரை சந்தித்து இதுபற்றி புகாரளித்துள்ளனர்.
அதிக நேரம் நடுவர்களிடம் அவர்கள் உரையாடினார்கள் என்றும் கூறப்படுகிறது. ஆனால், நேரம் அதிகம் கடந்து விட்டது என்பதால், வெண்டர் டுசனின் அவுட் மறுபரிசீலனை செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கரீனா கபூர் மகன் பெயர் என்ன? பள்ளி தேர்வில் கேள்வி.. கொதித்து போய் அரசு எடுத்த ஆக்சன்
- 'மன்னிச்சிடுங்க, தப்பு நடந்துடுச்சு...' சிபிஎஸ்சி தேர்வில் இடம்பெற்ற 'கேள்வி'யினால் வெடித்த சர்ச்சை...!
- மனுஷன் 2 வருஷமா நிற்காம ஓடுறாரு… அவருக்கு ஒரு ப்ரேக் கொடுங்கப்பா..!- இளம் வீரருக்காக முன்னாள் வீரர் பரிந்துரை!
- யாராவது அவரோட ஜெர்சியில 'நெஞ்சுப்பக்கம்' கவனிச்சீங்களா...? முக்கியமான 'விஷயத்தை' மறைத்து விளையாடிய ரிஷப்...! எதுக்காக 'அப்படி' பண்ணினார்...?
- “சூர்யகுமாரை விட ‘இவர்’தான் அதுக்கு சரிபட்டு வருவார்”- முன்னாள் விக்கெட் கீப்பரின் ஐடியா செட் ஆகுமா..?
- ஐயோ, நான் ஒரு 'பொண்ணு' தாங்க...! 'ஒரு அளவுக்குத்தான் சகிச்சுக்க முடியும்...' 'இதுக்கு மேல முடியாது...' - லேடீஸ் டீம் 'கோல் கீப்பர்' எடுத்த 'அதிரடி' முடிவு...!
- VIDEO: ஒரு ஸ்டெம்ப் வச்சு 'எப்படி' கரெக்ட்டா அடிக்குறாரு பாருங்க...! 'தல'ன்னா சும்மாவா...! - மேட்ச் தொடங்குறதுக்கு முன்னாடி 'தோனி' கொடுத்த பயிற்சி வீடியோ...!
- எனக்குள்ள இருக்குற 'வேதனை'ய சொல்றதுக்கு 'வார்த்தை' இல்ல...! 'எல்லாம் முடிஞ்சு போச்சு...' இனி என்ன பண்ண முடியும்...? - ரிஷப் பண்ட் உருக்கம்...!
- VIDEO: ஐயோ, என்ன 'இப்படி' பண்ணிட்டாரு...! 'ஒரு சுற்று சுற்றி கீழே விழுந்த தினேஷ் கார்த்திக்...' ஒரு நிமிஷம் அப்படியே 'உறைஞ்சு' நின்ன வருண்...! என்ன நடந்தது...? - வைரல் வீடியோ...!
- VIDEO: ஒலிம்பிக்கில் அதிர்ச்சி சம்பவம்!.. சக போட்டியாளர்களுக்கு கிடைக்கவிடாமல்... தண்ணீர் பாட்டில்களை தட்டிவிட்ட மாரத்தான் வீரர்!.. வைரல் வீடியோ!