ரிஷப் பண்ட் உயிரை காப்பாத்தியவருக்கு கிடைக்கப்போகும் மிகப்பெரிய கவுரவம்..! முழு தகவல்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் நேற்று அதிகாலை விபத்தில் சிக்கியதை அடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விபத்தின் போது பண்ட்டை காப்பாற்றிய ஊழியர்களுக்கு மத்திய அரசின் 'நற்கருணை வீரன்' (Good Samaritan) விருது அளிக்கப்பட இருப்பதாக உத்திராகண்ட் போலீசார் தெரிவித்திருக்கின்றனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ஆக வலம் வருபவர் ரிஷப் பண்ட். இடது கை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இதுவரை 33 டெஸ்ட் போட்டிகளில் 5 சதங்கள் மற்றும் 11 அரை சதங்களுடன் 2,271 ரன்கள் எடுத்துள்ளார். அவர் 30 ODI மற்றும் 66 T20I போட்டிகளில் முறையே 865 மற்றும் 987 ரன்கள் எடுத்துள்ளார். சமீபத்தில் வங்காளதேச கிரிக்கெட் அணிக்கு எதிரான தொடரில் ஆடி இருந்தார். அடுத்த மாதம் இலங்கைக்கு எதிரான T20 போட்டிகளுக்கான மற்றும் ஒருநாள் அணியில் அவர் காயம் காரணமாக இடம் பெறவில்லை.
இந்நிலையில், உத்தரகண்ட் மாநிலம் ரூர்க்கி அருகே நேற்று (வெள்ளிக்கிழமை) அதிகாலையில் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட், கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்தில் பலத்த காயமடைந்த அவர் உடனடி சிகிச்சைக்கு சக்ஷாம் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் உயர் சிகிச்சைக்கு டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். புத்தாண்டுக்கு முன்னதாக தனது தாயை ஆச்சரியப்படுத்த ரிஷப் பந்த் பயணம் செய்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
பண்ட் சென்ற கார் விபத்துக்குள்ளாகி எரிந்துகொண்டிருந்த நேரத்தில் அவரை காப்பாற்றி ஆம்புலன்சுக்கு போன் செய்த பேருந்து டிரைவர் சுஷில் மன், மற்றும் அவருக்கு உதவி செய்தவர்களுக்கும் விருது வழங்கப்பட இருக்கிறது. இதுகுறித்து உத்திராகண்ட் DGP ஸ்ரீ அஷோக் குமார் வெளியிட்ட அறிக்கையில்,"விபத்துக்குப் பிறகு முதல் மணிநேரம், (கோல்டன் ஹவர்) பாதிக்கப்பட்டவருக்கு மிகவும் முக்கியமானது. முதல் ஒரு மணி நேரத்தில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். இத்தகைய சூழ்நிலையில் உடனடி நடவடிக்கைகளை எடுக்க குடிமக்களை ஊக்குவிக்க குட் சமாரிட்டன் (Good Samaritan) விருது அளிக்கப்படுகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, விபத்துக்கு பிறகு ரிஷப் பண்டை காப்பாற்றிய ஊழியர்களுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய பயிற்சியாளருமான VVS லக்ஷ்மன் நன்றி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "கார் ஓட்டும்போது".. 3 வருஷத்துக்கு முன்னாடியே ரிஷப் பண்ட்-க்கு ஷிகர் தவான் கொடுத்த அட்வைஸ்.. கடைசில இப்படி ஆகிடுச்சேன்னு வருத்தப்படும் ரசிகர்கள்..!
- விபத்தில் சிக்கிய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்.. பிரதமர் நரேந்திர மோடியின் உருக்கமான ட்வீட்..!
- கார் ஓட்டும் போது தூங்கிய ரிஷப் பண்ட்?.. விபத்து குறித்த முதல் கட்ட விசாரணையில் போலீசார் தகவல்!
- விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட்.. உடல்நிலை & அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர் அளித்த தகவல்! முழு விவரம்
- RISHABH PANT: 6 இடங்களில் காயம்.. முழங்காலில் தசைநார் கிழிவு.. ரிஷப் பண்ட்டின் உடல்நிலை குறித்து BCCI அறிக்கை..
- விபத்தில் சிக்கிய ரிஷப் பந்த்.. டிவைடரில் மோதி தீப்பிடித்த கார்.. அதிர்ச்சி சம்பவம்!!
- "அவரோட Bus ஓட்டுற ஸ்டைல் தான்"... 50 வயது டிரைவர் மீது காதலில் விழுந்த 24 வயது பெண்.. கடைசியில நடந்த ட்விஸ்ட்.!!!
- வாயிலேயே விழுந்த பந்து.. பறிபோன 4 பற்கள்.. இலங்கை வீரருக்கு கிரவுண்ட்ல நடந்த சோகம்.. வீடியோ..!
- EXCLUSIVE: விடுதலை படப்பிடிப்பு இடைவேளையில் விபத்து.. உயிரிழந்த சண்டைப் பயிற்சியாளர்.. நடந்தது என்ன..?
- சென்னை: மெட்ரோ ரயில் பணியில் இருந்த கிரேன் மோதியதால் சேதமான மாநகர பேருந்து.!