'தோனி' என்கிட்ட சொன்ன மிக முக்கியமான 'விஷயம்'.. "ப்பா, மனுஷன் எவ்ளோ நேர்மையா இருக்காரு பாருங்க.." நெகிழ்ந்து போன 'உத்தப்பா'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

14 ஆவது ஐபிஎல் சீசன், வரும் ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதியன்று நடைபெறவுள்ள நிலையில், தற்போதே சில அணிகள் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அதிலும் குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி உள்ளிட்ட வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சீசனில், புள்ளிப் பட்டியலில் 7 ஆவது இடம் பிடித்து வெளியேறிய சென்னை அணி, இந்த முறை அதிலிருந்து மீண்டு வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது.

கடந்த சீசனில், தனிப்பட்ட காரணங்களுக்காக விலகிய சென்னை வீரர் ரெய்னா, இந்த முறை மீண்டும் அணியில் இணைந்துள்ளார். அதே போல, கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஏலத்தில், மொயின் அலி, புஜாரா, கிருஷ்ணப்பா கவுதம் உள்ளிட்ட வீரர்களை சென்னை அணி எடுத்தது. மேலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் கடந்த சீசன் ஆடிய ராபின் உத்தப்பாவையும் டிரேடிங் முறையில், சென்னை அணி எடுத்துக் கொண்டது.

தோனியும், உத்தப்பாவும் பல ஆண்டுகளாக நண்பர்களாக இருந்து வரும் நிலையில், தோனி சொல்லித் தான் வயதான உத்தப்பாவை சென்னை அணி இணைத்துக் கொண்டது என ஒருபுறம் தகவல் பரவி வந்தது. இந்நிலையில், இதுபற்றி தோனி தன்னிடம் என்ன கூறினார் என்பதை உத்தப்பா, மனம் திறந்து பேசியுள்ளார்.

'தோனி ஒருநாள் என்னை தொலைபேசியில் அழைத்து பேசினார். அப்போது, அவர் என்னிடம் , 'நான் உன்னைத் தேர்வு செய்யவில்லை என்பதை நீ தெரிந்து கொள்ள வேண்டும். சிஎஸ்கே அணியின் தலைமை நிர்வாகக் குழு, பயிற்சியாளர்கள் மற்றும் சி.இ.ஓ ஆகியோர் இணைந்து எடுத்த முடிவு இது' என தோனி தன்னிடம் கூறியதாக உத்தப்பா கூறினார்.

மேலும், தோனி தன்னிடம் பேசியது பற்றி உத்தப்பா விவரிக்கையில், 'நான் உன்னை சிஎஸ்கே அணியில் எடுத்து விட்டேன் என யாரும் நினைத்து விடக்கூடாது. உனது திறமையின் மூலம் தான் நீ இங்கு வர வேண்டும் என்பது என்னுடைய விருப்பம்.


உன்னை அணியில் எடுப்பது பற்றி என்னிடம் ஆலோசனை கேட்ட போது, மற்றவர்களிடமும் இது பற்றி ஆலோசனை கேட்டு முடிவெடுங்கள் என நான் கூறினேன். ஏனென்றால், தோனி இருப்பதால் தான் உத்தப்பா அணியில் வந்ததாக யாரும் கூறி விடக்கூடாது' என தோனி பேசியதாக உத்தப்பா குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தோனியின் நேர்மை குணம் பற்றி நெகிழ்ந்து போய் உத்தப்பா பாராட்டி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்