“நான் காசி சார் நம்பர் தர்ரேன்.. நீ அவர் கிட்ட பேசு”.. CSK அணியில் உத்தப்பா சேர உதவிய ஸ்டார் ப்ளேயர்.. வெளியான சுவாரஸ்ய தகவல்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசிஎஸ்கே அணியில் இணைய உதவிய வீரர் குறித்து ராபின் உத்தப்பா சுவாரஸ்ய தகவலை தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் முதல் சீசன் தொடங்கியபோது ராபின் உத்தப்பா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். இதனை அடுத்த ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு சென்றார். அந்த சீசனில் உத்தப்பா சிறப்பாக விளையாடவில்லை. 15 போட்டிகளில் விளையாடி 175 ரன்களை மட்டுமே எடுத்தார். இதனை அடுத்து 2010-ம் ஆண்டு அதிரடியாக விளையாடி 300 ரன்களை குவித்து அசத்தினார்.
அடுத்து 2011-ல் புனே வாரியர்ஸ் அணிக்கு சென்ற உத்தப்பா, அடுத்து கொல்கத்தா அணிக்காக விளையாடினார். அங்கு சற்று மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதனால் உத்தப்பாவுக்கு இனி வாய்ப்பே கிடைக்காது என்றுதான் கருதப்பட்டது. அப்போது ராஜஸ்தான் ராயல்ஸ் உத்தப்பாவை வாங்கியது. அந்த சமயத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டிரேடிங் முறையில் உத்தப்பாவை வாங்கியது.
இந்த நிலையில் தமிழக சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினின் யூடியூப் பக்கத்திற்கு ராபின் உத்தப்பா பேட்டிகொடுத்துள்ளார். அப்போது சிஎஸ்கே அணியில் இணைந்த கதையை கூறினார். அதில், ‘கொல்கத்தா அணியில் இருந்தபோது சிறப்பாக விளையாடததால், ராஜஸ்தான் அணியிலும் சரியாக வாய்ப்பு கொடுக்கவில்லை. இதனால் எனது கிரிக்கெட் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருந்த நேரத்தில், எனது திறமையை நிரூபிக்க சையத் முஷ்டாக் அலி தொடரில் பங்கேற்று விளையாடி வந்தேன்.
அப்போது கேரளா, ஆந்திரா அணிகளுக்கு இடையிலான போட்டி மும்பையில் நடைபெற்றது. அதில் நான் கேரளா அணியிலும், அம்பட்டி ராயுடு ஆந்திரா அணியிலும் விளையாடினோம். ஆந்திர அணிக்கு ராயுடுதான் கேப்டன். அப்போது, ராயுடு என்னை நலம் விசாரித்து, “இனி என்ன செய்யப் போகிறாய்?” எனக் கேட்டார். பின், “நான் வேண்டுமானால் ஒன்று செய்கிறேன். உனக்கு காசி சாரினுடைய (சிஎஸ்கே சிஇஒ காசி விஸ்வநாதன்) தொலைபேசி என்னை தருகிறேன். நீங்கள் அவரை தொடர்பு கொள்ளுங்கள். உங்களை போன்ற வீரர் எங்கள் அணிக்கு தேவை” எனக் கூறினார். நானும் நம்பரை வாங்கி வைத்துக்கொண்டேன்.
ஆனால், இதுவரை நான் அப்படி யாரிடமும் கேட்டதில்லை. முதல் முறையாக காசி சாருக்கு ஃபோன் செய்து, “நான் சென்னை அணிக்காக விளையாடினால் நன்றாக இருக்கும்” என கூறினேன். இதன்பின்னர் ராஜஸ்தான் அணியிடம் பேச்சு வார்த்தை நடந்தது. மும்பையிலிருந்து நான் கிளம்பும் போது, காசி சார் எனக்கு ஃபோன் செய்தார். அப்போது, “ராபி ஒப்பந்தம் முடிந்தது, நீங்கள் எங்களோடு சேர போகிறீர்கள்” என கூறினார்’ என்று ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார். கடந்த ஐபிஎல் தொடரில் ராபின் உத்தப்பா சிறப்பாக விளையாடியதால், நடந்து முடிந்த ஐபிஎல் ஏலத்தில் மீண்டும் அவரை சிஎஸ்கே அணி வாங்கியது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- முதல்ல ரோகித், அப்புறம் வில்லியம்சன்.. இப்போ ரிஷப் பந்த்.. ஐபிஎல் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை..!
- VIDEO: அப்படியே விராட் கோலி மாதிரியே பண்றாரே.. யாருப்பா இந்த பையன்..?
- "ஆமா அது என் தப்புதான்.. அதுக்காக இப்படி பண்ணாதீங்க".. இந்திய ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்த ஐபிஎல் வீரர்..!
- சர்ச்சையான தோனி நடிச்ச ஐபிஎல் விளம்பரம்.. மத்திய ஒளிபரப்பு துறை அதிரடி நடவடிக்கை..!
- “நெறைய பணம் செலவு செஞ்சிருக்காங்க.. நிச்சயம் ஏதாவது செய்வாங்க”.. MI அணி பற்றி பாகிஸ்தான் வீரர் சொன்ன கருத்து..!
- VIDEO: யாருப்பா இந்த பையன்..? முதல் மேட்ச்லயே தரமான சம்பவம்.. ஏபிடி மாதிரி மிரட்டிய MI வீரர்..!
- "கையெழுத்து போடுங்க, இல்லன்னா.." 'CSK' உத்தப்பாவுக்கு MI வைத்த செக்.. பல ஆண்டுகளுக்கு பிறகு வெளியான பரபரப்பு தகவல்
- “அவர் இப்படி அடிப்பார்ன்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கல”.. தொடர் தோல்வி.. நொந்துபோய் ரோகித் சர்மா சொன்ன பதில்..!
- "ரெய்னா'வ எடுக்கல'ன்னு சொல்லி என்ன தான் திட்டுனாங்க.." பிரபல சிஎஸ்கே வீரர் பகிர்ந்த விஷயம்..
- "ஏற்கனவே மேட்ச் தோத்த கடுப்பு.." கோபத்தில் கத்திய ரோஹித்.. அதுவும் யாருகிட்ட தெரியுமா??.. வைரல் வீடியோ