"கையெழுத்து போடுங்க, இல்லன்னா.." 'CSK' உத்தப்பாவுக்கு MI வைத்த செக்.. பல ஆண்டுகளுக்கு பிறகு வெளியான பரபரப்பு தகவல்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கடந்த 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடி வந்த ராபின் உத்தப்பாவை, சிஎஸ்கே அணி டிரேடிங் முறையில் 2021 ஆம் ஆண்டு வாங்கிக் கொண்டது.

Advertising
>
Advertising

தொடர்ந்து, மீண்டும் இந்தாண்டு மெகா ஏலத்தில், உத்தப்பாவை எடுத்த சிஎஸ்கே, அவரை சிறப்பாக பயன்படுத்தி வருகிறது.

சீனியர் வீரர் என்றாலும், தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை அளித்து வருகிறார் உத்தப்பா. லக்னோ அணிக்கு எதிரான போட்டியில், அதிரடியாக ஆடி அரை சதமடித்திருந்தார்.

பல அணிகளில் ஆடிய உத்தப்பா

முன்னதாக, 2021 ஆம் ஆண்டு பிளே ஆப் மற்றும் இறுதி போட்டிகளில் சென்னை அணிக்காக களமிறங்கிய உத்தப்பா, அதிரடியாக ஆடி ரன்கள் குவித்திருந்தார். இதனால், அவர் மீது நம்பிக்கை வைத்து சிஎஸ்கே இந்த முறை ஏலத்தில் எடுத்துள்ளது. ராஜஸ்தான் மற்றும் சென்னை அணிகளுக்காக ஆடியதற்கு முன்பு, பெங்களூர், மும்பை உள்ளிட்ட பல அணிகளிலும் உத்தப்பா ஆடி வந்துள்ளார்.

என்னால நல்ல ஆட முடியல

ஐபிஎல் தொடர் 2008 ஆம் ஆண்டு ஆரம்பித்த போது, மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆடி வந்தார் உத்தப்பா. அதன் பிறகு, 2009 ஆம் ஆண்டு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக உத்தப்பா களமிறங்கி இருந்தார். இதுகுறித்து பேசிய உத்தப்பா, "ஆர்சிபி அணிக்காக நான் முதல் ஐபிஎல் தொடரை ஆடிய போது, அந்த தொடர் முழுக்க என்னுடைய தனிப்பட்ட காரணங்களால் நான் மன அழுத்தத்தில் இருந்தேன். அந்த தொடரின் போது, ஒரு போட்டி கூட என்னால் சிறப்பாக ஆட முடியவில்லை.

டீம்'ல வாய்ப்பு கிடைக்காது..

நான் அணியில் இருந்து வெளியே உட்கார வைக்கப்பட்டு, பின் மீண்டும் அணியில் களமிறங்கிய ஒரு போட்டியில் மட்டும் அரை சதமடித்திருந்தேன். அணிக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற போது, அப்படி ஆடினேன். முன்னதாக, மும்பை அணிக்காக நான் ஆடி வந்த போது, அங்கிருந்து பெங்களூர் அணிக்கு பரிமாற்றம் செய்யப்பட்டேன். அப்போது, என்னிடம் மும்பை அணியில் இருந்த ஒருவர், நீ பெங்களூர் அணிக்கு மாறும் பத்திரத்தில் கை எழுத்து போடவில்லை என்றால், மும்பை அணியில் இருந்தாலும் ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்காது என கூறினார்.

மும்பை அணி மீது விஸ்வாசம்

ஐபிஎல் தொடரில் ஒரு அணியில் இருந்து மற்ற அணிக்கு மாற்றப்பட்ட முதல் சில வீரர்களில் நானும் ஒருவன். பெங்களூர் அணிக்காக ஆட வேண்டும் என்பது எனக்கு கடினமாக இருந்தது. ஏனென்றால், மும்பை அணியில் தான் எனது முழு விஸ்வாசமும் அப்போது இருந்தது. நாம் ஒரு அணிக்காக ஆடும் போது, அந்த அணி மீது தான் நம் விஸ்வாசம் இருக்கும். இதனால், முதலில் நான் மும்பை அணியில் இருந்து விலகிச் செல்வதற்காக, கையெழுத்திட மறுத்து விட்டேன்.

ஆனால், இறுதியில் வேறு வழி இல்லாமல், சம்மதம் சொல்லி பெங்களூர் அணியில் இணைந்து கொண்டேன்" என உத்தப்பா தெரிவித்துள்ளார்.

CHENNAI-SUPER-KINGS, IPL, CSK, IPL 2022, ROBIN UTHAPPA, MI, RCB, ராபின் உத்தப்பா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்