"இந்திய அணியில் என் மகன்.." இளம் வீரருக்காக தோனி, கோலி சொன்ன பொன்னான வார்த்தை.. நெகிழும் பிரபல வீரரின் தந்தை..
முகப்பு > செய்திகள் > விளையாட்டு15 ஆவது ஐபிஎல் தொடரில் பாதிக்கும் மேற்பட்ட லீக் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், அடுத்தடுத்து ஒவ்வொரு போட்டிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்பதால், அனைத்து அணிகளும் கடுமையாக போராடி வருகின்றது.
பொதுவாக, ஐபிஎல் தொடர் நடைபெறுகிறது என்றாலே, எந்தெந்த இளம் வீரர்கள் புதிதாக ஜொலிக்கிறார்கள் என்பதை பார்க்கவும் அதிகம் பேர் ஆவலாக இருப்பார்கள்.
ஐபிஎல் தொடரில் ஜொலிக்கும் இளம் வீரர்கள்
இதற்கு காரணம், வருங்கால இந்திய அணியில் ஆட யார் எல்லாம் தகுதியாக இருப்பார்கள் என்பதை அறிந்து கொள்ள தான். அதே போல, ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடி, பும்ரா முதல் வெங்கடேஷ் ஐயர் வரை பல வீரர்கள், இந்திய அணிக்காகவும் ஆட வாய்ப்பு பெற்று, தங்களின் திறனை நிரூபித்துள்ளார்கள்.
ஒவ்வொரு பாலும் செம ஃபாஸ்ட்..
அந்த வகையில், நடப்பு ஐபிஎல் சீசனிலும், ஆயுஷ் படோனி, திலக் வர்மா, உம்ரான் மாலிக் உள்ளிட்ட பல வீரர்கள் வேற லெவலில் அசத்தி வருகின்றனர். வருங்கால இந்திய அணியின் தூண்கள் என்றும் இவர்களை பலரும் பாராட்டி வருகின்றனர். அதிலும் குறிப்பாக, வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக், பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இதற்கு மிக முக்கிய காரணம், அவரது பந்தின் வேகம் தான். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஆடி வரும் உம்ரான், அனைத்து போட்டிகளிலும் 150 கி.மீ வேகத்தில் வரை பந்து வீசி வருகிறார்.
அதே போல், முக்கிய விக்கெட்டுகளை எடுக்கவும் அவர் தவறுவதில்லை. அவரது பந்து வீச்சை பலரும் பாராட்டி வருவதையடுத்து, இந்திய அணியிலும் விரைவில் அவர் இடம்பிடிப்பார் என ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். முன்னதாக, கடந்த 2021 ஆம் ஆண்டு டி 20 உலக கோப்பைத் தொடரில், இந்திய அணியின் நெட் பவுலராகவும் உம்ரான் மாலிக் இருந்து வந்துள்ளார்.
உம்ரானின் தந்தை காணும் கனவு
அப்போது இந்திய அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி மற்றும் மென்டராக இருந் தோனி ஆகியோர், உம்ரான் மாலிக்கிடம் என்ன பேசினார்கள் என்பது பற்றி, அவரின் தந்தை அப்துல் ரஷீத், சில கருத்தினை தெரிவித்துள்ளார்.
"எம்.எஸ். தோனி மிகப் பெரிய லெஜண்ட். விராட் கோலியும் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர். இவர்கள் இருவரையும் உம்ரான் மாலிக் சந்தித்துள்ளார். அப்போது அவர்கள், உம்ரானை இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் என கூறி பாராட்டி இருக்கிறார்கள். இது பற்றி என்னிடம் பகிர வேண்டி, உம்ரான் என்னை அழைத்த போது, அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். விளையாட்டின் இரண்டு ஜாம்பவான்கள் தன்னை பற்றி பொன்னான வார்த்தைகளை சொன்னதால், அவர் மிகுந்த பூரிப்பில் இருந்தார்.
இந்திய அணியின் ஜெர்சியில் எனது மகனை பார்க்க வேண்டும் என்பது தான் எனது ஒரே கனவு. உலக கோப்பையிலும் அவர் ஒரு நாள் ஆட வேண்டும் என நான் விரும்புகிறேன். நிச்சயம் உம்ரான் அதை செய்வார். தற்போது இந்த நிலைக்கு வந்து விட்டார். விரைவில் அங்கும் செல்வார் என நான் நம்புகிறேன். ஒட்டுமொத்த நாட்டையும் அவர் பெருமைப்படுத்துவார்" என ஆசையுடன் அப்துல் ரஷீத் தெரிவித்துள்ளார்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ”CSK இந்த விஷயத்துல ரெய்னாவ மிஸ் பண்ணுது”… அட ஆமால்ல… அமித் மிஸ்ரா போட்ட வைரல் tweet!
- “ராயுடு சூப்பரா விளையாடுனாரு.. ஆனா இங்கதான் நாங்க மிஸ் பண்ணிட்டோம்”.. கடைசி ஓவர் வரை போராடி தோல்வி.. ஜடேஜா கொடுத்த விளக்கம்..!
- கடைசி வரை இருந்த நம்பிக்கை.. தோனி அவுட்டானதும் மைதானத்தில் நடந்த விஷயம்.. "இதுனால தான்'ங்க அவர் பெஸ்ட் 'பினிஷர்'.."
- "ஜடேஜா மட்டும் அத கரெக்ட்டா பண்ணி இருந்தா 'CSK' கூட 'Win' பண்ணி இருக்கலாம்.." அடித்துச் சொல்லும் முன்னாள் வீரர்..
- "ரிஷி தவான் கண்ணாடி'ய பாத்து தான் ராயுடு பொளந்து கட்டி இருப்பாரு.." முன்னாள் வீரர் போட்ட முடிச்சு.. "இதுல என்னங்க இருக்கு??.."
- "அதுக்கு இது சரியா போச்சு.." கேட்ச் விட்ட சாண்டனர்.. ஜடேஜாவுடன் ஒப்பிட்டு மீம்ஸ் பறக்க விட்ட ரசிகர்கள்.. பின்னணி என்ன??
- 6 வருசத்துக்கு அப்றம் ஐபிஎல் ஆடும் பிரபல வீரர்!!.. 'CSK' அணிக்கு எதிராக பெரிய பிளான் போட்ட PBKS??..
- ”எல்லோருக்கும் இப்படி ஒரு காலம் வரும்.. ஆனா”… ஐபிஎல் மோசமான சாதனை… Emotion ஆன ரோஹித் ஷர்மா!
- கே.எல்.ராகுலுக்கு அபராதம்.. ‘மறுபடியும் இதே மாதிரி நடந்தா ஒரு மேட்ச்ல விளையாட முடியாது’.. IPL நிர்வாகம் அதிரடி..!
- “அதுக்கான நேரம் வந்திருச்சு”.. IPL-ல் பட்டைய கிளப்பும் நடராஜன்.. முன்னாள் இந்திய கேப்டன் ஓபன் டாக்..!