WATCH VIDEO: ‘எங்கப்பா பந்து?’... ‘கடைசி ஓவரில் என்ன நடந்தது?’... ‘விவாதத்தை கிளப்பிய ரசிகர்கள்’!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநியூசிலாந்துக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் இந்திய வீரர் மணீஷ் பாண்டே, பீல்டிங் செய்வது போல பாவனை செய்ததை அம்பயர்கள் கவனிக்க தவறியதால் அபராதத்தில் இருந்து இந்திய அணி தப்பியதாகவும், இல்லை அது தெரியாமல் எதேச்சையாக நடந்தது என்றும் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் விவாதத்தை கிளப்பியுள்ளனர்.
நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி முதலில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதன் முதல் டி20 போட்டி ஆக்லாந்தில் இன்று நடந்தது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராத் கோலி முதலில் பீல்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து நியூசிலாந்து அணி களத்தில் இறங்கி ஆடியது. இப்போட்டியில் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்த போது போட்டியின் கடைசி ஓவரில், நியூசிலாந்து வீரர் டைலர், பந்தை பவுண்டரிக்கு அடிக்க, முன்கூட்டியே பந்தை தடுக்க வந்த இந்திய வீரர் மணீஷ் பாண்டே, பந்தை எடுக்காமல் தவறவிட்டுட்டு பந்தை வீசுவது போல் வெறும் கையை வைத்து சைகை வீசினார்.
ஐசிசி விதி 41.5-ன் படி எதிரணியைச் சேர்ந்தவரை வார்த்தைகள் மூலமாகவோ, செயல்கள் மூலமாகவோ குழப்பி குழப்பும் வகையில், 'Fake Fielding' என அழைக்கப்படும் இந்த வித பீல்டிங்குகளுக்கு தற்போது முழுக்க முழுக்க தடை விதித்துள்ளது ஐசிசி. இந்த வித விக்கெட் எடுப்புகளுக்கு அபராதமாக எதிரணிக்கு 5 ரன்கள் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. இந்நிலையில் மணீஷ் பாண்டே பந்தை எடுக்காமல் சைகை காட்டியதை, அம்பயர்கள் கவனிக்க தவறியதால், இந்திய அணி 5 ரன்கள் அபராதத்தில் இருந்து தப்பியது.
பின்னர் பந்தை எடுத்து ஜடேஜா தூக்கி பவுலர் பும்ராவை நோக்கி வீசினார். மேலும் பாண்டே இந்தப் பந்தை தவறவிட்டதை கவனித்த கோலி அவரை நோக்கி கோபமாக கத்தியதும் குறிப்பிடத்தக்கது. எனினும் இந்தப் போட்டியில் வெற்றிப்பெற்ற பின்னர் பேட்டியளித்த கேப்டன் விராத் கோலி, பீல்டிங் ஒன்றுதான் நாங்கள் சரிசெய்ய வேண்டிய விஷயம் என்று கூறிய நிலையில், இளம் வீரரான மணீஷ் பாண்டே இவ்வாறு செய்ததை அடுத்து ரசிகர்கள் சமூவலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
‘ரிமோட் பேட்டரியை விழுங்கிய 2 வயது குழந்தை’.. தொண்டையில் சிக்கிய பரிதாபம்.. மதுரை அருகே அதிர்ச்சி..!
தொடர்புடைய செய்திகள்
- Video: தர்மப்பிரபு நீங்க 'இங்கேயும்' வந்துட்டீங்களா?... பாய்ந்து 'பிடித்த' வீரரால்... பதறும் ரசிகர்கள்!
- ஒருவழியா 'கேப்டனுக்கு' அடிச்ச லக்... ஆனாலும் இது 'சரிப்பட்டு' வருமா?... ரசிகர்கள் கேள்வி!
- இப்டி செஞ்சா 'எப்டி' வெளையாடுறது?... 'கேள்வி' கேட்ட கேப்டன்... 'அப்பவே' சொல்லிருக்கலாமே பிசிசிஐ காட்டம்!
- 'அவர்கள் மென்மையானவர்கள்!'... ' நியூசிலாந்து குறித்து கோலி கருத்து'... 'நெகிழ்ச்சியில் ரசிகர்கள்!'
- அவருக்கு ‘அத’ பண்ணனும்னு ‘அவசியமே’ இல்ல... ‘ஆனாலும்’ பண்ணினாரு... நெகிழும் ‘பிரபல’ வீரர்...
- 'அவ்ளோ' சதம் அடிச்சவர விட்டுட்டு... சின்ன பையன 'டீம்ல' எடுத்ததுக்கு... இதுதான் காரணமாம்?
- 'அவருக்கு' பதிலா நாங்க இருக்கோம்... களத்தில் 'குதித்த' இளம்வீரர்கள்... 'உலகக்கோப்பை' தோல்விக்கு பழிதீர்க்குமா கோலி படை?
- இந்திய அணியின் 'முக்கிய' வீரர் திடீர் விலகல்... யாரை எடுக்குறது?... தலையை பிய்த்துக் கொள்ளும் தேர்வுக்குழு!
- விராட்கோலி தான் பெஸ்ட்... இல்ல ஸ்டீவ்ஸ்மித் தான் பெஸ்ட்... தல...தளபதி ரேஞ்சுக்கு தெறிக்கவிடும் ட்விட்டர் பதிவுகள்
- மைதானத்துக்கு 'வெளிய' உக்கார வச்சா... எப்டி பெரிய 'பேட்ஸ்மேனா' ஆக முடியும்?... 'தெறிக்க' விட்ட முன்னாள் வீரர்!