VIDEO: கே.எல்.ராகுல் செய்த செயல்.. ‘வார்னிங்’ கொடுத்த அம்பயர்.. ஸ்டம்ப் மைக்கில் பதிவான ஆடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நடப்பு கேப்டன் கே.எல்.ராகுலை அம்பயர் எச்சரிக்கை செய்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

VIDEO: கே.எல்.ராகுல் செய்த செயல்.. ‘வார்னிங்’ கொடுத்த அம்பயர்.. ஸ்டம்ப் மைக்கில் பதிவான ஆடியோ..!
Advertising
>
Advertising

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

Umpire warns Rahul for late pullout against Rabada

இப்போட்டியில் காயம் காரணமாக கேப்டன் விராட் கோலி விலகியுள்ளார். அதனால் அவருக்கு பதிலாக துணைக் கேப்டன் கே.எல்.ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.

Umpire warns Rahul for late pullout against Rabada

அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் களமிறங்கினர். இதில் மயங்க் அகர்வால் 26 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனை அடுத்து களமிறங்கிய புஜாரா 3 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

இந்த இக்கட்டான சமயத்தில் களமிறங்கிய ரஹானே கை கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரும் தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே அவுட்டாகி வெளியேறினார். இதனைத் தொடர்ந்து வந்த இளம் வீரர் ஹனுமா விஹாரி 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் 4 விக்கெட் இழப்புக்கு 91 ரன்கள் மட்டுமே எடுத்து இந்திய அணி தடுமாறி வருகிறது.

இந்த நிலையில் இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரபாடா பந்து வீச வரும்போது, திடீரென்று கே.எல்.ராகுல் பேட்டிங் செய்யாமல் நகர்ந்தார். இதனால் அதிருப்தியடைந்த அம்பயர் ‘பேட்டிங் செய்ய வேகமாக தயாராகுங்கள் கேஎல் ராகுல்’ என கடிந்து கொண்டார். இது ஸ்டம்ப் மைக்கில் அப்படியே பதிவானது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

KLRAHUL, INDVSA, UMPIRE, WARNING, RABADA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்