"இதுக்கு எல்லாமா அவுட் கேப்பீங்க?".. அப்பீல் செய்த இந்திய வீரர்கள் .. அடுத்த நிமிஷமே சிரிக்க தொடங்கிய நடுவர்!!.. Throwback!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சோஷியல் மீடியாவில் நாம் அதிக நேரத்தை செலவிடும் போது நம்மை சுற்றி நடக்கும் ஏராளமான விஷயங்கள் குறித்து நம்மால் தெரிந்து கொள்ள முடியும்.

Advertising
>
Advertising

Also Read | Kamal Haasan : "ஒரு நாடா இருக்குறது பிரச்சனை தான்.. ஆனா தூண்டிவிட்டது யாரு.?".. Bigg Boss ல் கமல் பரிந்துரைத்த புத்தகம்.!

அது மட்டுமில்லாமல், முன்பு நடந்த வீடியோக்கள் அல்லது செய்திகள் கூட 'Throwback' என்ற பெயரில் ரவுண்டு அடிப்பதை நாம் பார்த்திருப்போம்.

அந்த வகையில், கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு துறைகளில் பல வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்வு தொடர்பான வீடியோக்கள் மீண்டும் ட்ரெண்ட் ஆகி, பார்ப்போர் பலரையும் ரிப்பீட் மோடில் கூட இயங்க வைக்கும்.

இதில், கிரிக்கெட்டில் நடந்த வேடிக்கையான, பரபரப்பான அல்லது விறுவிறுப்பு நிறைந்தது என வகை வகையாக வீடியோக்கள் வைரல் ஆவதை நாம் பார்த்திருப்போம். இந்த நிலையில், தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் கடந்த 2017 ஆம் ஆண்டு மோதிய டெஸ்ட் போட்டி ஒன்றில் நடந்த சம்பவம் தொடர்பான Throwback வீடியோ, கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் வைரலாகி வருகிறது.

கடந்த 2017 ஆம் ஆண்டு, 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை ஆடுவதாக இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது ஆஸ்திரேலிய அணி. இதில், 3 போட்டிகள் வென்று இந்திய அணி தொடரை கைப்பற்றி இருந்தது. மேலும், டெஸ்ட் தொடரின் 3 வது போட்டி டிராவில் முடிந்திருந்தது.

இந்த போட்டியில், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் முதல் இன்னிங்சில் சதமடித்திருந்தனர். அப்போது ஸ்மித் பேட்டிங் செய்து கொண்டிருந்த சமயத்தில் தான் வேடிக்கையான சம்பவம் ஒன்று அங்கே அரங்கேறி இருந்தது. ஸ்மித் பேட்டிங் செய்து கொண்டிருக்க, ரவீந்திர ஜடேஜா பந்து வீசி இருந்தார். இந்த பந்து ஸ்மித் காலுக்கு இடையே சிக்கிக் கொண்டதாக தெரிகிறது.

அப்போது கீப்பர் நின்ற சஹா, பந்தை பிடிக்க ஸ்மித் அருகே செல்ல நிலை தடுமாறி ஸ்மித் கீழே விழுந்தார். இதனைத் தொடர்ந்து கீழே போய் பந்தை எடுத்த சஹா, அவுட் என அப்பீல் செய்தார். அதே போல, ஜடேஜாவும் சிரித்துக் கொண்டு அவுட்டிற்கு அப்பீல் செய்ய போட்டி நடுவர் சிரிப்பை அடக்க முடியாத படி அங்கிருந்து நடந்து செல்கிறார்.

போட்டி முடிந்து ஐந்து ஆண்டுகள் ஆகியும் தற்போதும் இந்த வீடியோவை பார்த்தால் அடக்க முடியாமல் சிரிப்பு வருவதாக ரசிகர்களும் குறிப்பிட்டு வருகின்றனர்.

Also Read | Non Vegக்கு நோ.. "மீறி சாப்பிட்டா இதான் கதி".. காலம் காலமா Follow பண்ணும் கிராமம்!!

CRICKET, UMPIRE, LAUGH, INDIAN PLAYERS, INDIAN PLAYERS APPEAL THROWBACK

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்