‘நல்லவேளை அம்பயர் காப்பத்திட்டாரு’.. நூலிழையில் தப்பிய வங்கதேசம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலகக்கோப்பை தொடரில்  வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 314 ரன்களை குவித்துள்ளது.

இந்தியா-வங்கதேசத்துக்கு இடையேயான உலகக்கோப்பை லீக் போட்டி இன்று பிர்மிங்ஹாம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 314 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக ரோஹித் ஷர்மா 104 ரன்களும், கே.எல்.ராகுல் 77 ரன்களும், ரிஷப் பண்ட் 48 ரன்களும் அடித்தனர். இதனைத் தொடர்ந்து 315 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணி  விளையாடி வருகிறது.

இப்போட்டியின் 36 -வது ஓவரை வங்கதேச வீரர் சர்கார் வீசினார். அந்த ஓவரின் 4 -வது பந்தை விராட் கோலி எதிர்கொண்டார். அப்போது பந்து பேடில் பட்டு செல்வது போல தெரிந்ததால் வங்கதேச வீரர்கள் ரி-வியூ கேட்டனர். ஆனால் ரி-வியூ கேட்பதற்கான நேரம் முடிந்ததுவிட்டதால் அம்பயர் அதனை மறுத்தார். இதனை அடுத்து நடுவர்கள் சோதித்துப் பார்த்ததில் பந்து முதலில் பேட்டில் பட்டு சென்றது தெளிவாக தெரிந்தது. இதனால் வங்கதேச அணி ரி-வியூ வாய்ப்பு பறிபோவதில் இருந்து தப்பியது.

ICCWORLDCUP2019, VIRATKOHLI, INDVBAN, TEAMINDIA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்