"நல்லா போயிட்டு இருந்த 'மேட்ச்'.. திடீரென 'ட்விஸ்ட்' கொடுத்த 'நடுவர்கள்'.. அதிர்ந்து நின்ற 'டுபிளஸ்ஸி'.. 'குழம்பி' போன 'ரசிகர்கள்'.. 'வைரல்' வீடியோ!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு14 ஆவது ஐபிஎல் சீசனில், நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில், சென்னை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
முன்னதாக, டெல்லி அணிக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வி அடைந்திருந்த சென்னை அணி, பஞ்சாப் அணிக்கு எதிராக வெற்றி பெற்று, தங்களது வெற்றிக் கணக்கை இந்த சீசனில் தொடங்கியுள்ளது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, சென்னை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. இறுதியில், 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 106 ரன்கள் மட்டுமே பஞ்சாப் அணியால எடுக்க முடிந்தது.
தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணி, 16 ஆவது ஓவரில் இலக்கை எட்டியது. இதனிடையே, போட்டிக்கு நடுவில், சென்னை வீரர் டுபிளஸ்ஸி (Du Plessis) பேட்டிங் செய்து கொண்டிருந்த போது நடந்த சம்பவம் ஒன்று, வேடிக்கையை ஏற்படுத்தியுள்ளது. 14 ஆவது ஓவரை பஞ்சாப் அணி வீரர் மெரிடித் வீசினார். அப்போது, அவர் வீசிய பந்து பவுன்சராக சென்றது.
இந்த பந்தை எதிர்கொண்ட டுபிளஸ்ஸியின் கை கிளவ்ஸில், பந்து பட்டுச் சென்றதாக, பஞ்சாப் அணி வீரர்கள் அவுட்டிற்கு அப்பீல் செய்தனர். தொடர்ந்து, போட்டி நடுவர் அனில் சவுத்ரியும் அவுட் கொடுக்க முயன்றார். ஆனால், அந்த ஓவரில் ஏற்கனவே ஒரு ஷார்ட் பால் போடப்பட்டதால், இந்த பந்தும் ஷார்ட் பால் என்றால் அது நோ பாலாக அறிவிக்கப்படும் என்பதால், அனில் சவுத்ரி, சக நடுவருடன் இதுகுறித்து ஆலோசித்தார்.
இதன் பிறகு, மூன்றாம் நடுவர் வீரேந்தர் ஷர்மாவிடம் ஆலோசிக்கப்பட்ட நிலையில், அந்த பந்து பவுன்சர் இல்லை என வீரேந்தர் ஷர்மா கூற, அனில் சவுத்ரியும் அவுட்டில்லை என கூற முயன்றார். ஆனால், மூன்றாம் நடுவர் எதையும் கவனிக்காமல் அவுட் கொடுக்க கூறியதும், கள நடுவர் அனில் சவுத்ரி அவுட் என அறிவித்தார்.
இதனால், சற்று அதிர்ந்த டுப்ளஸ்ஸி, மீண்டும் அப்பீல் செய்தார். அதன் பிறகு தான், பேட்டில் பட்டதா இல்லையா என்பதையே மூன்றாம் நடுவர் ஆராய்ந்தார். அப்போது, பேட்டில் பந்து படவில்லை என்பது தெளிவாக தெரிந்தது. அதன் பிறகு, இறுதியில் நாட் அவுட் என அறிவிக்கப்பட்டது.
ஷார்ட் பால் பரிசோதிக்க போய், பந்து பேட்டில் பட்டதா என்பதை கவனிக்காமல், அவுட் என மூன்றாம் நடுவர் அறிவித்து, மீண்டும் அவுட்டில்லை என்பது தெரிய வந்ததையடுத்து, நடுவரின் செயல்களால் போட்டிக்கு இடையே சிறிது நேரம் குழப்பம் நீடித்தது. கடைசி வரை களத்தில் நின்ற டுபிளஸ்ஸி, 36 ரன்கள் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "போய் அடுத்த வேலைய பாருங்க 'தம்பி'.." 'சிஎஸ்கே' வீரரை ஒரே வார்த்தையில் ஆஃப் செய்த 'தோனி'.. 'வைரலாகும்' வீடியோ!.. நடந்தது என்ன??
- "இது ஒண்ணு போதுமே.. பல நாளுக்கு இத 'டிரெண்ட்' பண்ணிடுவோம்.." போட்டிக்கு நடுவே 'பிராவோ' செய்த 'செயல்'.. கொண்டாடித் தீர்த்த 'ரசிகர்கள்'!.. 'வைரல்' வீடியோ!!
- 'படு பயங்கர ஸ்கெட்ச்!.. பின்ன, பவர் ப்ளேல 4 விக்கெட்னா சும்மாவா'!?. பஞ்சாப் கிங்ஸ் டாப் ஆர்டருக்கு வேட்டு வைத்த... சாஹரின் வியூகம் 'இது' தான்!
- "இதுனால தான் என்ன எல்லாரும் 'பெஸ்ட்'ன்னு சொல்றாங்க!!.." 'பஞ்சாப்' அணிக்கு 'ஜடேஜா' வைத்த 'செக்'.. ஆடிப் போன 'ராகுல்' அண்ட் 'கோ'.. 'வைரல்' சம்பவம்!!
- ‘5 வருசத்துக்கு முன்னாடி பார்த்த தோனியே இல்ல இது’!.. ‘ஒரு கேப்டனா அவர் இதை செஞ்சே ஆகணும்’.. கம்பீர் சொன்ன அட்வைஸ்..!
- VIDEO: 'அப்போ இன்னைக்கு பெருசா ஏதோ சம்பவம் இருக்கு...' 'சின்ன தல' வெளியிட்ட வீடியோ...! 'இது சும்மா டீசர் தான்...' - வேற லெவல் எதிர்பார்ப்பில் 'சிஎஸ்கே' ஃபேன்ஸ்...!
- ‘இந்த 1 நிமிஷம் உங்க கணக்குதான்’!.. நேக்கா ‘அம்பயர்’ பக்கம் திருப்பிவிட்ட ரிஷப் பந்த்.. அஸ்வின் ஓவரில் நடந்த சுவாரஸ்யம்..!
- "முதல் 'மேட்ச்'ல தான் பிரச்னைன்னு பாத்தா.. அடுத்ததும் 'சிக்கல்' தான் போலயே??.." 'சிஎஸ்கே'வுக்கு வந்துள்ள பெரிய 'தலைவலி'!.. "எப்படி தான் சமாளிக்க போறங்களோ!?.."
- 'ஆத்தாடி!.. அடுத்த மேட்ச் நம்ம கூட தான் ஆடப் போறாங்களா'!?.. தீபக் ஹூடாவின் வெறித்தனத்தை... நய்யாண்டி செய்த சிஎஸ்கே!.. என்ன ப்ளானா இருக்கும்?
- "அடுத்த 'மேட்ச்' கண்டிப்பா இவரு வேணும்".. 'இளம்' வீரருக்கு வேண்டி, 'ரசிகர்கள்' வைத்த 'கோரிக்கை'.. 'சிஎஸ்கே'வில் நடக்கப் போகும் 'ட்விஸ்ட்'!!