மகளிர் தினத்தில் பிறந்த மகள்.. மீண்டும் தந்தையான உமேஷ் யாதவ்.. வாழ்த்தும் ரசிகர்கள்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக இருப்பவர் உமேஷ் யாதவ். கடந்த 2010 ஆம் ஆண்டு, ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடந்த ஒரு நாள் போட்டியின் மூலம் இந்திய அணியில் அறிமுகமாகி இருந்தார்.

Advertising
>
Advertising

                           Images are subject to © copyright to their respective owners.

Also Read | "டி 20 மேட்ச்னா இப்டி இருக்கணும்".. ஒவ்வொரு பந்தும் ஃபயர்.. 20 ஓவர் மேட்சில் நடந்த வேற மாதிரி சம்பவம்!!

இதனைத் தொடர்ந்து, 2011 ஆம் ஆண்டு டெஸ்ட் அணியில் அறிமுகமாகி இருந்த உமேஷ் யாதவ், தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான டி 20 போட்டியின் மூலம் டி 20 போட்டியிலும் அறிமுகமாகி இருந்தார்.

மேலும் அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் சிறந்து விளங்கி வரும் உமேஷ் யாதவ், தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடந்து வரும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரிலும் இடம் பிடித்துள்ளார்.

Images are subject to © copyright to their respective owners.

உமேஷ் யாதவ் - தான்யா வத்வா

இதனிடையே, கடந்த 2013 ஆம் ஆண்டு மே மாதம், ஃபேஷன் டிசைனரான தன்யா வத்வா என்பவரை உமேஷ் யாதவ் திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து இந்த தம்பதிக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்திருந்தது. இந்த குழந்தைக்கு குணார் என பெயர் சூட்டி இருந்தனர்.

Images are subject to © copyright to their respective owners.

மகளிர் தினத்தில் பிறந்த மகள்

இந்த நிலையில், இந்த தம்பதிக்கு சர்வதேச மகளிர் தினமான நேற்று (மார்ச் 08) உமேஷ் யாதவ் மற்றும் தன்யா வத்வா ஆகியோருக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் உமேஷ் யாதவ் பதிவிட்டுள்ள நிலையில், அவருக்கும் அவரது மனைவிக்கும் கிரிக்கெட் பிரபலங்கள் தொடங்கி ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் தங்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Images are subject to © copyright to their respective owners.

மகளிர் தினத்தில் அவருக்கு மகள் பிறந்துள்ளது பற்றி நெகிழ்ச்சியுடன் தனது இன்ஸ்டாகிராம் பதிவிலும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பாக உமேஷ் யாதவின் தந்தை மரணம் அடைந்த சூழலில் தற்போது அவருக்கு மகள் பிறந்துள்ள விஷயம் சற்று உருக்கமாகவும் அமைந்துள்ளது.

Also Read | ரோஹித் ஷர்மாவிற்கு தொப்பியை கொடுத்ததும்.. ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தை பாராட்டிய பிரதமர் மோடி..

UMESH YADAV, UMESH YADAV BLESSED WITH BABY GIRL, WOMENS DAY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்