உலகக்கோப்பை போட்டியில்.. ‘நான் அப்படி நடந்துக்க சச்சின், டிராவிட்தான் காரணம்’.. ரகசியம் உடைத்த இளம்வீரர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

U19 உலகக்கோப்பையில் விளையாடிய அனுபவம் குறித்து இளம் வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் பகிர்ந்து கொண்டுள்ளார்.

U19 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் வங்கதேச அணியிடம் இந்தியா தோல்வியை தழுவியது. போட்டி முடிந்த பின்னர் இரு அணி வீரர்களும் மைதானத்துக்குள் சண்டையிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்திய அணியில் ஒரு சில வீரர்கள் மட்டுமே ஆக்ரோஷமாக செயல்பட்டனர். அதில் முக்கியமானவர் ரவி பீஷ்னாய். இவர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நான்கு விக்கெட்டுகளை எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில் எதிரணி வீரர்கள் எவ்வளவு சீண்டினாலும் கடைசி வரை அமைதியாக இருந்த இந்திய வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால். இவர் உலகக்கோப்பை தொடர் முழுவதும் எதிரணி வீரர்கள் சீண்டும்போது அமைதி காத்தார். இவரது அதிகபட்ச எதிர்ப்பு சிரிப்பு மட்டுமே. இறுதிப்போட்டியில் 88 ரன்கள் எடுத்து இந்திய அணிக்கு பலம் சேர்த்தவர். பேட்டிங் செய்யும்போது தான் அமைதியாக இருக்க காரணம் என்ன என்பதை டைம்ஸ் ஆப் இந்தியா ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அதில், எனது அமைதிக்கு காரணம் ராகுல் டிராவிட் மற்றும் சச்சின்தான். அவர்கள் என்னிடம் ஒரு விஷயத்தை சொன்னார்கள். அது ‘எப்போதும் களத்தில் உனது பேட் மட்டுமே பேச வேண்டும், வாய் அல்ல’ என்பதுதான். இதை நான் எப்போதும் கடைப்பிடிப்பேன். அதனால்தான் வங்கதேச வீரர்கள் சீண்டும்போது கூட அமைதி இருந்து, அவர்களுக்கு சிரிப்பை மட்டுமே பதிலாக தந்தேன். அந்த நேரத்தில் என் மனதில் இருந்த ஒரே விஷயம், ரன்களை அதிகமாக எடுக்க வேண்டும் என்பதுதான்.

பீஷ்னாயைப் பொறுத்தவரை நன்றாக பந்து வீசினார். இந்த தொடரில் அதிக விக்கெட் எடுத்ததும் அவர்தான். கடைசி போட்டியில் ‘அமைதியாக இரு, உணர்ச்சிவசப்பட வேண்டாம்’ என அவரிடம் சொல்லிக்கொண்டே இருந்தேன். உலகக்கோப்பை இறுதிப்போட்டி என்றபோது அதிக டென்ஷன் இருக்கும். இன்னும் கூடுதலாக ரன்கள் சேர்த்திருந்தால் நாங்கள் வெற்றி பெற்றிருப்போம் என யாஷஸ்வி ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

CRICKET, BCCI, SACHINTENDULKAR, RAHULDRAVID, YASHASVIJAISWAL, U19WORLDCUP

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்