"இதுக்குத்தான் காத்திருந்தோம்".. வரலாறு படைத்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி.. கண்ணீர் விட்ட கேப்டன்..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் டி 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது முடிவடைந்துள்ளது.

                         Images are subject to © copyright to their respective owners

Advertising
>
Advertising

இது ஐசிசி நடத்திய முதல் மகளிருக்கான Under 19 டி 20 உலக கோப்பை ஆகும். இதனால் இந்த தொடரின் ஆரம்பத்தில் இருந்தே எந்த அணி வெற்றி பெறும் என்று எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்தது.

தொடர்ந்து, அரையிறுதி சுற்றுக்கு நியூசிலாந்து, இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் முன்னேறி இருந்தது. இதிலிருந்து இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கும் முன்னேற்றம் கண்டிருந்தது.

மேலும் இந்த உலக கோப்பைத் தொடரின் இறுதி போட்டியில் முதலில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்திருந்தது. இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆரம்பத்தில் இருந்தே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இங்கிலாந்து அணி. 17.1 ஓவர்களில் வெறும் 68 ரன்கள் மட்டுமே எடுத்த இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்திருந்தது. இந்திய அணி சார்பில் டைடாஸ் சாது, அர்ச்சனா தேவி, பர்ஷவி சோப்ரா உள்ளிட்டோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர்.

Images are subject to © copyright to their respective owners

தொடர்ந்து எளிய இலக்கை நோக்கி ஆடிய இந்திய மகளிர் அணி, மூன்று விக்கெட்டுகளை இழந்து 14 ஓவரில் இலக்கை எட்டிப் பிடித்திருந்தது. அதுமட்டுமில்லாமல், மகளிருக்கான 19 வயதுக்கு உட்பட்டோர் டி 20 உலக கோப்பையையும் இந்திய மகளிர் அணி வென்று வரலாற்று சாதனையும் புரிந்துள்ளது. முன்னதாக இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த சமயத்தில், சற்று நிலையாக ஆடிக் கொண்டிருந்த வீராங்கனை ரயானாவின் கேட்சை அர்ச்சனா தேவி அற்புதமாக எடுத்திருந்தது மிகப் பெரிய அளவில் திருப்புமுனையாகவும் அமைந்திருந்தது.

அதே போல, இந்திய சீனியர் அணியில் விளையாடிய அனுபவமுள்ள இளம் வீராங்கனை ஷெஃபாலி வர்மா தான் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய மகளிர் அணியை கேப்டனாக வழிநடத்தி தற்போது கோப்பையை வென்றும் கொடுத்துள்ளார். இந்த வெற்றியை அனைவரும் கொண்டாடி இருந்த நிலையில், ஷெஃபாலி வர்மா ஆனந்த கண்ணீர் வடிக்கவும் செய்திருந்தார்.

Images are subject to © copyright to their respective owners

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் இந்த வரலாற்று சிறப்புமிக்க தருணத்தை பல கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடியும் வருகின்றனர்.

U 19 WOMEN WORLD CUP, INDIAN CRICKET TEAM, SHEFALI VERMA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்