சிஎஸ்கே தான் அப்பாவோட ஃபேவரைட்.. இளம் வீரருக்கு சென்னை அணியில் கிடைத்த இடம்.. ஆனாலும் சூழ்ந்து கொண்ட துயரம்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் மெகா ஏலம், கடந்த இரண்டு நாட்களாக மிகவும் சிறப்பாகவும், அதிகம் பரபரப்புடனும் நடந்து முடிந்தது.

Advertising
>
Advertising

ஒட்டு மொத்தமாக, 10 ஐபிஎல் அணிகளும், ஒவ்வொரு வீரர்களையும் எடுக்க கடுமையாக போட்டி போட்டது. எதிர்பாராத பல வீரர்கள், அதிக தொகைக்கு ஏலம் போயினர்.

இன்னொரு பக்கம், அதிகம் போட்டி நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட வீரர்களை எடுக்க, எந்த அணிகளும் முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. அப்படி பல வீரர்கள், இந்த முறை ஐபிஎல் போட்டியில் பங்கேற்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

U 19 வீரர்கள்

இன்னொரு பக்கம், சமீபத்தில் நடந்து முடிந்த U 19 உலக கோப்பையைக் கைப்பற்றி சாதனை புரிந்த இளம் இந்திய அணி வீரர்கள் சிலரையும், ஏலத்தில் போட்டி போட்டு அணிகள் சொந்தமாக்கியது. அந்த வகையில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சில இளம் வீரர்களை எடுப்பதில் ஆர்வம் காட்டியிருந்தது.

ராஜ்வர்தன் ஹங்கர்கேக்கர்

இளம் ஆல் ரவுண்டர் ராஜ்வர்தன் ஹங்கர்கேக்கர் பெயர் அறிவிக்கப்பட்டதும், அவரை எடுக்க சிஎஸ்கே அணியுடன், மற்ற சில அணிகள் போட்டி போட்டது. இறுதியில், சென்னை அணி ராஜ்வர்தனை 1.50 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. ஆல் ரவுண்டரான ராஜ்வர்தன், மிகவும் வேகமாக பந்து வீசக் கூடியவர். U 19 உலக கோப்பைத் தொடரில் கூட, 140 கி.மீ வேகத்தில் பந்து வீசியிருந்தார்.

அதே போல, மிடில் ஆர்டரிலும் அதிரடியாக ஆடக் கூடிய வீரர். ஒரு சிறந்த இளம் ஆல் ரவுண்டரை சிஎஸ்கே அணி சொந்தம் ஆகியுள்ளதால், பலரும் இதனை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், சென்னை அணியில் இடம்பிடித்தது பற்றி, இளம் வீரர் ராஜ்வர்தன் உருக்கமாக சில கருத்துக்களைப் பதிவிட்டுள்ளார்.

அப்பா சிஎஸ்கே ரசிகர்

'எனது தந்தை, சிஎஸ்கே அணியின் தீவிர ரசிகர். அதே போல, தோனியையும் அதிகம் ரசிப்பார். அந்த அணி ஆடும் போட்டியினை தவற விடவே மாட்டார். ஆனால், கொரோனா தொற்றின் மூலம் அவர் உயிரிழந்து விட்டார். நான் சிஎஸ்கே அணிக்காக ஆடவுள்ளதை, அவர் உயிரோடு இருந்து பார்த்திருந்தால், நன்றாக இருந்திருக்கும். எங்கள் அனைவரையும் விட, என் தந்தை தான் இப்போது அதிகம் மகிழ்ச்சி அடைந்திருப்பார். பேசுவதற்கு வார்த்தைகளே வரவில்லை' என கண்ணீருடன் தெரிவித்தார்.

முழு கவனம்

மேலும், சிஎஸ்கே அணியில் ஆடவுள்ளது பற்றி பேசிய அவர், 'பணத்தை விட, சிறப்பாக ஆடுவது தான் என்னை பொறுத்தவரையில் மிக முக்கியம். நான் சிறப்பாக விளையாடிக் கொண்டே இருந்தால், பணம் தானாக வரும். இதனால், தொடர்ந்து சிறப்பாக ஆடுவது மட்டும் தான் என் முழு கவனமாக இருக்கும்' என தன்னம்பிக்கையுடன் ராஜ்வர்தன் தெரிவித்துள்ளார்.

என்னுடைய அறிவுரை

அதே போல, ராஜ்வர்தனுக்கு சிஎஸ்கே அணியில் இடம் கிடைத்தது பற்றி பேசிய அவரின் பயிற்சியாளர், 'ஐபிஎல் போட்டிகளில் ஆடுவது அனைத்து கிரிக்கெட் வீரர்களுக்கும் ஒரு கனவாகும். ராஜ்வர்தனுக்கு நான் சொல்லும் ஒரே அறிவுரை என்னவென்றால், தோனியை பார்த்து அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என்பது தான். ராஜ்வரதனுக்கு வாய்ப்பு கிடைத்தால், நிச்சயம் தன்னுடைய திறமையை நிரூபிப்பார் என்பது எனக்கு தெரியும்.

அவர் அதிகம் மனவலிமையுடன் விளங்கும் வீரர். 2020 ஆம் ஆண்டு, ராஜ்வரதனின் தந்தை கொரோனா தொற்று மூலம் இறந்த பிறகு, ஒரு மனஉறுதி மிக்க நபராக வளர்ந்து வருவதை நான் பார்த்து வருகிறேன்' என தெரிவித்துள்ளார்.

CHENNAI-SUPER-KINGS, MSDHONI, RAJVARDHAN HANGARGEKAR, CSK, IPL 2022

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்